27.7.10. 2024 கவியரங்கம் மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது. " பெண்கள் உலகின் கண்கள் " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

27.7.10. 2024 கவியரங்கம் மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது. " பெண்கள் உலகின் கண்கள் " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் " பெண்கள் உலகின் கண்கள் "என்ற தலைப்பில் பேராசிரியர் தலைவர் சக்திவேல் தலைமையில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், மதுரை, வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ்ச்செம்மல் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார்.பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். புரட்சிப்பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் முன்னிலை உரையாற்றி விருதுகளை வழங்கினார். கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம் ,இரா .இரவி , புலவர் மகா .முருகு பாரதி, ச. லிங்கம்மாள்,அனுராதா இதயத்துல்லா ( இளையாங்குடி ), தென்காசி புலவர் ஆறுமுகம் , இராமபாண்டியன் , பா.பழனி, முனியாண்டி, பொன் பாண்டி , ,இந்தி ஆசிரியர் ம .வேல்பாண்டியன் முனைவர் சு .நாகவல்லி ஆகியோர் கவிதை பாடினார்கள். மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர், மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில், அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் கொடுத்து அனுப்பிய விருதுகள். சிறப்பாக கவிதை பாடிய கவிஞர்கள் இராமபாண்டியன் ,அனுராதா இருவரும் விருது பெற்றனர் துணைத்தலைவர் முனைவர் வரதராஜன் நன்றி கூறினார். பார்வையாளர்களாக விரிவுரையாளர் அதி வீர பாண்டியன், தலைமையாசிரியர் மோகனக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள். இருவர் வர இயலாத காரணத்தால் துணைச்செயலர் கு.கி.கங்காதரன் கவிதையை பேராசிரியர் சக்திவேலும்,குறளடியான் கவிதையை பொன்.பாண்டியும் வாசித்தனர் படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்
CNSI3e4vCQOb5zN4ZjXDOuLaqA-1Qh4UA6ayDyFX7Aac0aI6sRL_MBwUmyJFX0U9/s1600/25.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; ">

கருத்துகள்