*சிக்மண்ட் ஃபிராய்ட் நினைவு நாளில்*
ஃபிராய்ட் மனித உளவியலின் தந்தை. இவருடைய Id, Ego, Superego என்கிற கோட்பாடு மூலம் பிரபலமடைந்தார். இவரது சிறந்த கண்டுபிடிப்பு 'இயக்க உளவியல்' ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதனின் ஆளுமைக்கும், அவரது உடலிற்கும் பாவிக்க முடியும் என்பதை கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியில் இது ஒரு மைல் கல் ஆகும். இந்த உளவியல், மனிதனின் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்கி, பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தது. இவரது சிகிச்சை நுட்பங்கள் தனி நிபுணத்துவம் வாய்ந்தவை.
தியரி ஆஃப் ட்ரான்ஸ்பரன்ஸ் எனப்படுகிற உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு, உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவற்றால்
சிக்மன்ட் ஃபிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.
ஃபிராய்டு மனித மனத்தை மூன்று பகுதிகளாக பிரித்தார். அவை,
1.உணர்வு மனம்
2.உணர்விற்கு அப்பாற்பட்ட மனம்
3.தொலைநோக்கு மனம் ...,
என்கிற இந்த குண இயல்புகள் எல்லாமே, மனிதர்களிடையே உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id), முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego), அகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego) - என்கிற மூன்று சூழ்நிலை உணர்வுகளாலேயே ஏற்படுகிறது என்றும் கூறினார். இந்த மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை தீர்மானிக்கும் என்றும் கூறினார்.
மனநல நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் வார்த்தைகள் விளையாடக்கூடிய சக்திவாய்ந்த பாத்திரத்தை எடுத்துக் காட்டுகின்றன என்றார். சில உடற் நோய்கள் மன ரீதியாக
தோன்றியிருக்கலாம் என்றுஉடலில் மட்டும் அல்ல, மனிதனின் வாழ்க்கையில் தன்னுணர்வற்ற நிலையில் குறிப்பிடத்தக்க சக்தியை ஆராய்தல்.,
பேசி குணமாக்கும் மனோ பகுப்பாய்வில் வாய்மொழி உளவியல் சிகிச்சையின் முதல் வடிவத்தின் வளர்ச்சி அறிதல்..,
மயக்க நிலையில் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஒரு அமைப்பை உருவாக்குதல்...,
மனிதனின் தன்னுணர்வற்ற நிலையில் மனோ பகுப்பாய்வு சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது, அவற்றிற்கிடையே நிகழும் பரிமாற்றத்தை கண்டறிதல்....,
மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சுயநினைவற்ற பாலியல் மற்றும் ஆக்கிரமிக்கும் ஆசைகளின் செல்வாக்கு பரவலை கண்டறிதல்.....,
பல்வேறு வாழ்க்கை நிலைகளில் குறிப்பாக குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் வெளிப்படும் அடிப்படை மனித கவலைகளின் தொடர்ச்சியை கண்டுபிடித்தல் .....,
..., இப்படி பல்வேறு அணுகுமுறைகளில் இவரது பங்களிப்பு, முத்தாய்ப்பாக பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாகக் கொண்டு வந்ததது மற்றும் மயக்கத்தின் இருப்பு பற்றிய அவரது ஆழமான புரிதல் இன்றளவும் உளவியலில் முக்கியத்துவமானது.
இப்படியாக தன் வாழ்நாளில் அவர் ஏராளமான கருத்துகளை முன்வைத்தார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், மனிதனின் மூளையைப் பரிசோதிக்கத் தொழில்நுட்பங்கள் இல்லாத ஒரு காலகட்டத்தில், அவர் முன்மொழிந்த சில கருத்துகளின் நுணுக்கங்களை இன்று ஏற்றுக்கொள்ள இயலாது என்றாலும், அவரது கருத்துகளில் பொதிந்திருக்கும் பொதுவான கூறுகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. தனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானவை என்று நம்பினார்.
பெரும்பான்மையான அவரது கோட்பாடுகள் அறிவியல் பூர்வவமாக ஆய்வுக்கு உட்படுத்த முடியாதவை என்றாலும், அவை அனைத்தும் காலாவதியாகி விடவில்லை என்பதே நிதர்சனம்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋 நம்பிக்கை கொண்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக