உரைகல்லின் உரைக்கோவை ********************************* சாதனை மனிதர் ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ சாமுவேல் ஜான்சன்

உரைகல்லின் உரைக்கோவை ********************************* சாதனை மனிதர் ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ சாமுவேல் ஜான்சன் ================= **சாமுவேல் ஜான்சன் இணையற்ற இலக்கிய மேதை.. **ஆங்கில மொழி அகராதியை முதன்முதலாக வெளியிட்டு ஆங்கில மொழிக்கு அரியதொரு தொண்டாற்றியவர் சாமுவேல் ஜான்சன். **ஆங்கிலத்தில் அகராதிகள் பல எழுதப்பட்டன. எனினும், எளிமையான அதேசமயம் ஆழமான அகராதி ஒன்று இல்லை என்கிற குறை இருந்தது. அதை நீக்கியவர் சாமுவேல் ஜான்சன். சாமுவேல் ஜான்சனின் வாழ்வியல் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இங்கிலாந்தில் லிச்ஃபீல்டு என்ற இடத்தில் 1709ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம நாள் பிறந்தார். ஆரம்ப காலத்தில் தாயிடம் கல்விப் பயன்றார். பின்னர் உள்ளூர் பள்ளியில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்றார். சாமுவேல் ஜான்சனின் அப்பா மிகவும் ஏழை. இவரின் அப்பா புத்தகங்களுக்கு பைண்டிங் செய்யும் தொழில் செய்து வந்தார்.படிக்க புத்தகங்கள் வாங்கக்கூட அவரிடம் காசு இல்லை. ஜான்சன் உடன் உட்கார வைத்துக்கொண்டு புத்தகங்களுக்கு பைண்டிங் போடுகிற வேலை கொடுப்பார் தந்தை. அப்படி வரும் நூல்களை படித்து படித்து தன்னுடைய அறிவை பெருக்கிக் கொண்டார் ஜான்சன். கல்வியும் _ பணியும் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ பல இடர்களுக்கிடையே தன் கல்வியை முடித்தார் சாமுவேல் ஜான்சன்.சில ஆண்டுகள் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டார். பின்னர் இலண்டன் சென்று நாளிதழ் மற்றும் வார இதழ்களுக்கு கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். திருமண வாழ்வு ^^^^^^^^^^^^^^^^^^^ எளிமையான முறையில் தன்னை விட இருபது வருடம் மூத்தவரான எலிசபத் போர்ட்டர் எனும் பெண்ணை மணந்தார். பெரும் பணக்காரியான அப்பெண் இவருடன் வாழ்ந்த காலத்தில் மிகவும் வறுமையில் வாழந்தாள்.மிகவும் வறுமையில் இருந்தார் சாமுவேல் ஜான்சன். ஆங்கில அகராதி உருவாக்கம் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இந்த சூழலில் தான் ஆங்கிலத்துக்கு ஒரு நல்ல கட்டமைக்கப்பட்ட வடிவிலான ஒரு அகராதி வேண்டும் என்று இவரிடம் சில வியாபாரிகள் வந்தார்கள்.சாமுவேல் ஜான்சனோ வறுமையில் வாடிக்கொண்டு இருந்தார். நம்பிக்கையோடு மூன்றே ஆண்டுகளில் முடித்து விடுகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டார். ஆனால் அகராதி மூன்று ஆண்டுகளில் முடிக்கமுடியவில்லை. துன்பம் மிகுந்த சூழ்நிலை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ அம்மாவை அடக்கம் பண்ணகூட காசில்லாமல் வாடிய சம்பவம் நடந்தது. ஒரு முறை ஐந்து பவுண்ட் கடனை திருப்ப செலுத்த முடியாமல் சிறைச்சென்றார். எல்லாவற்றிலும் உடனிருந்த அன்பு மனைவியும் இறந்தார். ஆங்கில அகராதி உருவாக்கம் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **ஒன்பது ஆண்டுகள் உழைப்பில் ஆங்கில அகராதி உருவானது. **பிரம்மாண்டமான ஆங்கில அகராதியை தனி நபராகத் தயாரித்தார். ஒன்பது ஆண்டுகள் அயராமல் உழைத்ததன் பயனாக 1755ஆம் ஆண்டு ஆங்கில மொழி அகராதியை வெளியிட்டார். இந்த அகராதியில் 42,773 வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன..ஒரு லட்சத்து பதினான்காயிரம் மேற்கோள்கள். நூல் தடிமனாக இருந்தது. ஐந்து பதிப்புகள் வந்தது. உலகம் முழுவதும் சாமுவேல் ஜான்சனின் புகழ் பரவியது. இணையற்ற பொக்கிஷம் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ சாமுவேல் ஜான்சன் அகராதி நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலத்தின் இணையற்ற பொக்கிஷமாக நிலைத்து நின்றது. இந்த அகராதி வெளியிடப்பட்டு 155 ஆண்டுகளுக்குப் பின் Oxford ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது. மற்றொரு முக்கியமான படைப்பு ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ சாமுவேல் ஜான்சன் மேற்கொண்ட மற்றொரு முக்கியமான பணி ஷேக்ஸ்பியர் உருவாக்கிய நாடகங்களைத் தொகுத்து பல்வேறு குறிப்புக்களோடு 1765ம் ஆண்டு இவர் வெளியிட்ட நூல் தொகுப்பு. இத்தொகுப்பில் 8 பகுதிகள் உள்ளன. வாழ்வியல் நம்பிக்கை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இறக்கும் வரை சாமுவேல் ஜான்சன் வறுமையில் தான் இருந்தார் என்றாலும் நம்பிக்கையோடு வாழ்ந்தார். **இப்பொழுது எண்ணற்ற அகராதிகள் வந்துவிட்டாலும் எல்லாவற்றுக்கும் முதல் மாதிரி என சொல்லப்படுகிற அளவுக்கு அற்புதமான ஓர் அகராதியை ஆங்கிலத்துக்கு தந்தவர் சாமுவேல் ஜான்சன். மறைவு ^^^^^^^^ சாமுவேல் ஜான்சன் 1784ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி காலமானார். புகழ்பெற்ற பல ஆங்கிலக் கவிஞர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கவிஞரின் மூலை (Poet's Corner) என்ற பகுதியில் இவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.முருகுவள்ளி

கருத்துகள்