மதுரை, திருமங்கலம், இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகம் நிறுவனர் பெருமதிப்புக்குரிய திரு பார்த்தசாரதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் (17.5.2024) நல்வாழ்த்துகள்.!!!
பேராற்றல் மிக்க இறைவனின் பேரருளும் பேரன்பு மிக்க திருமிகு இறையன்பு அவர்களின் அன்பும், நட்புகளின் அனுசரணையும், உறவுகளின் உள்ளன்பும் கிடைக்கப் பெற்று, தங்களது பணி ஓய்வு காலத்தை மிகச்சிறந்த முறையில் இளைஞர்களுக்கான/ பொது மக்களுக்கான நூலகம் அமைத்து உயர்வான செயலாற்றி பொதுநல நோக்கத்துடன் தங்களை அர்ப்பணிப்பு செய்து உள்ளது மேன்மையானது!.
மேலும் தாங்கள் ரோட்டாரி சங்கம் மூலமாகவும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் தேவை உள்ளவர்களுக்கு உதவிகள் செய்து வருவதும் காண முடிகிறது. மிகவும் மகிழ்ச்சியும்! பேரன்பும்!.
மேனாள் தலைமை செயலாளர் முனைவர் திருமிகு இறையன்பு அவர்களின்பால் தாங்கள் கொண்டுள்ள மரியாதையும், அன்பும், அவரது அன்றாட கருத்துகள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் பகிர்வது என்று தங்களின் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக உலகுக்கு அளிப்பது மிகவும் பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் சார்.!
கையில் கிடைத்த ஒப்பற்ற ஒளியை உலகெங்கும் காண்பித்து பேரொளி விளங்கச் செய்து தங்களின் பிறப்பின் பொருள் கிடைக்கப் பெற்றுள்ளது இறை அருள்!
இந்த நாள் போல் வாழ்வின் எல்லா நாட்களும் தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சிறந்த மன நலத்துடன், சீரோடும் சிறப்போடும் மேன்மையான வாழ்வு வாழ இறைவனை வணங்குகிறேன்!!!
Dr.இறையன்பு வாசகர் குழு சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்!
அன்புடன், மகேஸ்வரி சிவா, கோவை.
கருத்துகள்
கருத்துரையிடுக