படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி "உலகமும் பெரியாரும்" 'அவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். அவரிடம் செப்டம்பர் 17 தந்தை பெரியார் தினம் என்றேன். நீங்கள் திக, திராவிடர் கழகம் கட்சியை சேர்ந்தவரா என்றார். இல்லை என்றேன். எதிர் திசையில் பேசியவர் பெண். நம் வாழ்க்கையில் நமது பிறந்த தினம், மனைவி, குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் பிறந்த, வசிக்கும் நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம், திருமணமா னவர் எனில் திருமண நாள் என இப்படி பல பிறந்த, முக்கிய சிலர் மறைந்த தினங்களையும் நம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. முந்தைய காலங்களில் படிப்பறிவு குறைவு. அன்றைய காலத்திலேயே சரியான முறையில் பிறந்தநாள் விழா முதற்கொண்டு பல விழாக்களை கொண்டாடி மகிழ்ந்தவர்கள் தமிழர்கள். தந்தைப் பெரியார் என்பவர் திராவிடர் கழகத்திற்கு மட்டுமே சொந்தக்காரர் அல்ல. பல நூற்றாண்டு காலத்துக்கு முன்னரே அவர் பிறந்திருந்தால் இந்த மண், மக்கள் மேலும் வளம் பெற்றிருப்பார்கள்." "சிந்தனைச் சிகரங்கள்" நூல் பாகம் 2ல் இடம் பெறும் கருத்துக்கள்... எடப்பாடி ஆ அழகேசன். ---------------------------------------------------------------------------------------------------------------- படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. ஏ கிழவா, நீ என்ன செய்யவில்லை எங்களுக்கு? கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டிருந்தவனின் பேரன் இன்று அரசு அலுவலகத்தில் அதிகாரி! வயலில் நாற்றுநட்டுக் கொண்டிருந்தவளின் மகள் இன்று மருத்துவக் கல்லூரி மாணவி! மழைக்கு ஒழுகும் குடிசையில் பிறந்தவன் இன்று ஊரில் பெரிய சிவில் இன்ஜினியர்! சாக்கடை அள்ளிவன் வீட்டுப் பிள்ளை இன்று நகராட்சி ஆணையர்! பேனா பிடித்து எழுத தெரியாத பெற்றோர்க்கு பிறந்தவன் இன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்! கோயிலில் நுழையக் கூடாத ஜாதியில் பிறந்தவன் இன்று இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி! ஜமீன்தார் தோட்டத்து பண்ணையாளின் மகன் இன்று ஜில்லா கலெக்டர்! பேருந்து வசதியில்லாத ஊரில் பிறந்தவன் இன்று போக்குவரத்து ஆய்வாளர்! உயர்ஜாதியினர் முன்பு நிமிர்ந்து நிற்க முடியாத ஜாதியில் பிறந்தவன் இன்று மிடுக்காக நிற்கும் போலீஸ் அதிகாரி! ஏடெடுத்துப் படிக்கத் தெரியாதவன் வீட்டுப் பிள்ளை இன்று ஐடி துறையில் அமெரிக்காவில்! இவை அனைத்தும், கல்விக் கடவுள் சரஸ்வதியால் கிடைத்ததல்ல மூத்திரச்சட்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டே ஈரோட்டுக் கிழவன் போராடியதால் கிடைத்தது! நன்றி என்ற உணர்ச்சி இருக்கும்வரை பெரியார் வாழ்வார்! வை.இளங்கோவன்

கருத்துகள்