மகேஸ்வரி சிவா, கோவை.

இனிய சகோதரருக்கு, நேற்று தங்கள் இல்லத் திருமணம் மிகவும் அருமையாக நடந்தது மற்றும் தங்களின் அன்பு உபசரிப்புக்கு நன்றிகள்.🙏🏼 பெருமதிப்புக்குரிய மேனாள் தலைமை செயலாளர், முனைவர் இறையன்பு அவர்கள் மாங்கல்யம் எடுத்து கொடுக்க, மேலான உறவுகள், உற்ற நட்புகள், மதிப்புமிகு ஆன்றோர்கள் சான்றோர்கள், ஆசிரியர், பேராசிரியர் பெருமக்கள் ஓடியாடும் குழந்தைகள், பத்திரிகை துறையினர், பதிப்பகத்தார் என அனைவரும் வாழ்த்த தங்கள் மகன் செல்வன் பிரபாகரன் தன் வாழ்நாள் இணையை கரம்பிடிக்க திருமணம் அழகானதொரு காலை பொழுதில் மகிழ்வாக நடந்தது. வெளியூர்களில் இருந்தும் வந்து மணமக்களையும் பெற்றோர்களையும் வாழ்த்தினார்கள். இறைமையின் வாழ்த்துகள் குவிந்து மணமக்கள் நீடு நாள் நல்வாழ்வு வாழ எனது பிரார்த்தனைகள். 🙏🏼 -மகேஸ்வரி சிவா, கோவை.

கருத்துகள்