மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி.

மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி. ****** பேனுக்கும் போனுக்கும் என்ன வித்தியாசம் பேனு நம்மை தோண்டும், போனை நம்ம நோண்டுவோம்! ***** வங்கிகளை சனிக்கிழமை மூடிவிட திட்டம் அப்படியே காலாண்டு தேர்வு விடுமுறை முழு ஆண்டு தேர்வு விடுமுறை என்று விட்டு இரண்டு மாதம் மூடி விடுங்கள். ***** உங்களுக்கு ஒரு துன்பம் வரும்போது நண்பர்கள், உறவினர்கள் உடன் இருப்பார்கள். நம்பவில்லை என்றால் திருமண நிழற்பட ஆல்பத்தைப் பாருங்கள். .............................. உங்க வீட்டில் சண்டை வந்தால் அம்மா கை ஓங்கும், அப்பா கை வீங்கும் ***** மேலாளர் : ஏன் தாமதம்? நீங்க தானே கால நேரம் பார்க்காமல் வரவேண்டும் என்று சொன்னீங்க. ***** பூனைக்கு ஏண்டா மூக்கு வழியா பால் ஊத்துறே பாவம் இது வாயில்லாத ஜீவன்! ***** பணம் கட்டினால் கடவுளை அருகே பார்க்கலாம் அனாதை இல்லத்திற்கு பணம் கட்டினால் உங்களையே கடவுளாகப் பார்ப்பார்கள்! ***** கோழி முட்டை போட்டால் கோழிக்குஞ்சு வரும் வாத்தியார் முட்டை போட்டால் கோழிக்குஞ்சு வருமா? ***** ஏண்டா மாத்திரையை கீழே போடுறே மருத்துவர் சொன்னார், தலைவலி வந்தால் மாத்திரை போடுங்க என்றார். ***** கல்யாணம் ஆகாதவனுக்கு முடி விழுகுதேன்னு கவலை கல்யாணம் ஆனவனுக்கு அடி விழுகுதேன்னு கவலை ***** பொய்யான பல் மருத்துவர்னு எப்படி கண்டுபிடிச்ச பல் ஆடுதுனு சொன்னால் எந்தப்பாட்டுக்கு ஆடுதுனு கேட்டாரு! ***** உப்பு சைவமா? அசைவமா? சாம்பாரில் போட்டால் சைவம், கறிக்குழம்பில் போட்டால் அசைவம்! ***** இந்தியாவோட இன்சியல் என்ன? G எப்படி? தேசப்பிதா காந்தி, அப்படினா G தானே? ***** கதை எழுதும் ஆசிரியரை விளம்பரம் எழுதச் சொன்னது தப்பாப் போச்சு ஏன்? எல்லாம் சொல்லிட்டு கடைசியில் உண்மையல்ல எல்லாம் கற்பனையேனு சொல்லிட்டார். ,***** கணவன் : இதெல்லாம் காபியா? நாய் கூட குடிக்காது. மனைவி : நாய்க்கு நான் பூஸ்ட் கொடுத்திட்டேன். ***** விசா இல்லாமல் வியட்நாமுக்கு கூட போகலாம் வேலை இல்லாமல் சொந்தக்காரனுக வீட்டுக்குப் போக முடியாது. ***** மருத்துவர் : (எல்லா சோதனையும் செய்து விட்டுச் சொன்னார்) உங்க மனைவிக்கு கொழுப்பு அதிகம். கணவன் : எனக்கு முன்பே தெரியுமே! இதுக்கு போய் 1000 ரூபாய் செலவு வச்சிட்டீங்களே! ***** நோயாளி : வெயில் தாங்கலே, ஐஸ்யில் இருக்கனும் போல இருக்கு . மருத்துவர் : அவசரப்படாதீங்க, அறுவை சிகிச்சை முடிஞ்சதும் நிரந்தரமா ஐஸ் பெட்டிக்கே போயிடுவீங்க. ***** சத்தம் சோறு போடுமா? எப்படி. குக்கர் சத்தம் போட்டால் தான் சோறு கிடைக்கும். ***** தோழியிடம் சொன்னாள் : குடிச்சிட்டு வந்தா வீட்டு வாசற்படி மிதிக்காதேன்னு கணவனிடம் சொன்னேன்.தப்பாப் போச்சுடி அந்த ஆளு குடிச்சிட்டு வந்து ஓட்டைப் பிரித்து வாரான். ***** உங்க வீட்டுக்காரரை திட்டுவியா? சே சே திட்டவே மாட்டேன் .அடிப்பதோடு சரி! ***** மருத்துவர் : பயப்படாதீங்க தைரியமா இருங்க நோயாளி : நோயுக்கே பயப்படலே, உங்க கட்டணத்துக்காக பயப்படுறேன். ***** பணத்தை எல்லாம் பிடுங்கி விட்டு அன்பளிப்பாக பர்ஸ் தரும் இடம் நகைக்கடை! ***** ஏன் தாமதம் (ஆசிரியர்) மாணவன் : பள்ளி அருகே உள்ளது. மெதுவாகச் செல்லவும் என்று எழுதி இருந்தது. ***** என்னால பச்சை முட்டை சாப்பிட முடியாது ஏன்? எங்க ஊரில் வெள்ளை முட்டை தான் கிடைக்கும். ***** மனைவி : ஏங்க சொர்க்கத்தில் கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே! கணவன் : ஆமாண்டி அதனால் தான் அதுக்குப் பெயர் சொர்க்கம். ***** ஏன் மருந்து பாட்டிலை தடவிக்கிட்டி இருக்கே மருத்துவர் சொன்னார் வலி வந்தா தடவுங்க என்று ***** போன வருடம் வெயிலுக்கு ஆதார் கார்டு மாதிரி முகம் ஆச்சு! இந்த வருடம் வெயிலுக்கு முகம் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மாதிரி ஆயிருச்சு ***** இரவு தூக்கம் வரவில்லை என்று கவலைப்பட்டேன் பிறகு தான் புரிந்து கொண்டே உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்று! ***** ஏணிப்படியாக இருக்க வேண்டியவர்கள் ஏன் இப்படி எனக் கேட்கும்படி ஆகிவிடுகிறார்கள்! ***** அப்பா, அம்மாவிடம் அடி வாங்காதவன் கூட கொசுவிடம் கடி வாங்குவான்! ***** உங்க மகன் கீதைப்படி நடப்பவனா? எப்படி என் மருமகள் பெயர் கீதை! ***** மருத்துவர் ;உன் உதட்டில் எப்படி தேள் கொட்டியது ? மனைவியை கொட்டியதற்காக தேளுக்கு முத்தம் கொடுத்தேன் ***** தை மாதம் சூரியனுக்கு நாம் பொங்க வைப்போம் சித்திரை மாதம் சூரியன் நமக்கு பொங்க வைக்கும்! ***** அசைவ உணவு விடுதியில் சர்வரிடம் மூளை இருக்கா? உங்களுக்கு முன்னாடி வந்தவங்க எல்லாருக்கும் இருந்தது! உங்களுக்குத் தான் இல்லை.!தீர்ந்து போச்சு ***** சாம்பாரில் போட்டு இருந்த முருங்கைக்காய் சூப்பரா இருந்திச்சு சர்வர் : அது என் காதில் இருந்த பென்சில். தவறி சாம்பாரில் விழுந்துவிட்டது. ***** மாலை எதுக்கு வாங்கச் சொல்றீங்க (மருத்துவர்;அறுவை சிகிச்சையில் இவர் பிழைத்து விட்டால் எனக்குப் போடுங்க. இறந்துவிட்டால் அவருக்குப் போடுங்க! .

கருத்துகள்