படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !
தஞ்சாவூர் பொம்மை!
தஞ்சா வூரு பொம்மைதான்
தலையை ஆட்டும் பொம்மைதான்
எந்தப் பக்கம் சாச்சாலும்
எழுந்து நிற்கும் பொம்மைதான்!
வண்ண வண்ண பொம்மைதான்
வடிவம் உள்ள பொம்மைதான்
கண்ணைக் கவரும் பொம்மைதான்
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்
எந்தத் திசையில் விழுந்தாலும்
எழுந்தே நிற்போம் பொம்மைபோல்
நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!
மதுரை பாபாராஜ்
ஆண்டு: 2016
கருத்துகள்
கருத்துரையிடுக