படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.
" குறள் நெறி "
பரவு மானால்
குற்றங்கள்
மண்ணில் ஏது ?
" குறள் மணம் "
நிறையு மானால்
குடும்பத்தில்
சிக்கல் ஏது ?
" குறளறம் "
பெருகு மானால்
கோலாட்சி
ஊழல் ஏது ?
" குறள் வழி "
தழைக்கு மானால்
குடிப் புகழ்
தாழ்தல் ஏது ?
....கவி வேந்தர்
கா. வேழவேந்தன்...
கருத்துகள்
கருத்துரையிடுக