28.4.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை " தமிழுக்கு ஈடில்லை காண் ! " என்ற தலைப்பில் நடந்தது. மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் -, " தமிழுக்கு ஈடில்லை காண் !" " என்ற தலைப்பில் நடந்தது மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. செயலர் கவிஞர் இரா.இரவி கவியரங்கத் தலைமை வகித்தார்.

படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். 28.4.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை " தமிழுக்கு ஈடில்லை காண் ! " என்ற தலைப்பில் நடந்தது. மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் -, " தமிழுக்கு ஈடில்லை காண் !" " என்ற தலைப்பில் நடந்தது மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. செயலர் கவிஞர் இரா.இரவி கவியரங்கத் தலைமை வகித்தார் , பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் வரவேற்றார், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிதாயினி சோ .வனஜா நன்றி கூறினார் . மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா.இரவி அவர்களின் தலைமையில் " தமிழுக்கு ஈடில்லை காண் ! " என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது புலவர் மகா .முருகபாரதி ,முனைவர் இரா .வரதராசன், கவிஞர்கள் இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், மாவீரபாகு ,இரா .இராம பாண்டியன் ,அழகையா, கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள்,அனுராதா ,சோ .வனஜா மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ) , அஞ்சூரியா க .செயராமன் , தென்காசி திருவள்ளுவர் கழகம் ம .ஆறுமுகம் , முன்னாள் இராணு வீரர் சமயக்கண்ணு,செ..அனுராதா , பொன்பாண்டி ,சு .பாலகிருட்டிணன் ,எம்.முனியாண்டி , இந்தி ஆசிரியர் வேல்பாண்டி ,ஷா ஜஹான் , ஆகியோர் கவிதை பாடினார்கள் . கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று கவிதை வாசித்த கவிஞர்கள் பொன்பாண்டி ,சு .பாலகிருட்டிணன்,சோ .வனஜா விருது பெற்றனர். மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் நினைவாக ,அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன . . துணைத்தலைவர் முனைவர் கவிஞர் இரா.வரதராசன் எழுதிய " மணக்கும் மரபு மலர்கள் " என்ற நூல் வெளியிட்டனர் . கவியரங்கிற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் பள்ளியின் தாளாளர், புரட்க்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்

கருத்துகள்