உலக தண்ணீர் தினம் .22.3.2014 .
தண்ணீரை பார்க்கும் விழியாக மதிப்போம் !கவிஞர் இரா .இரவி !
இரண்டு நாடுகள் மகிழ்வாகப் பகிர்கின்றன !
இரண்டு மாநிலம் பகிர்வதில் சண்டை !
இயற்கையின் அன்பளிப்பு தண்ணீர் !
இனிதே உயிர் வாழத் தேவை தண்ணீர் !
ஏழைகளின் அவசர உணவு தண்ணீர் !
பணக்காரகளின் கைகளில் தண்ணீர் !
வள்ளுவன் உரைத்தான் அன்றே !நன்றே !
உணவாகவும் உணவு விளைவிக்கவும் தண்ணீர் !
அடிப்படைத் தேவைகளில் முதன்மை தண்ணீர் !
அத்தியாவசிய அவசியம் அனைவருக்கும் தண்ணீர் !
தாகம் தணிக்கும் உயர்ந்த உணவு தண்ணீர் !
தேகம் கழுவிட உதவிடும் தண்ணீர் !
ஆரோக்கியம் பேணிட வேண்டும் தண்ணீர் !
அனைவரின் உயிர் காப்பது தண்ணீர் !
முனிவரும் துறக்க முடியாது தண்ணீர் !
இனிவரும் காலம் காக்க வேண்டும் தண்ணீர் !
காலையில் மறக்காமல் அருந்துக தண்ணீர் !
காணமல் போக்கும் நோயை தண்ணீர் !
உணவு இன்றி கூட உயிர் வாழ்ந்திடலாம் !
தண்ணீர் இன்றி உயிர் வாழ்வது கடினம் !
உலக யுத்தம் வரும் தண்ணீருக்காக என்று
உளறுகின்றனர் சித்தம் கலங்கி !
இனி உலக யுத்தம் வரவே வராது !
இனி வரவும் கூடாது வர விடக் கூடாது !
உலக யுத்தத்தால் அடைந்த இன்னல் போதும் !
உலகில் அமைதி நிலவிட வேண்டும் !
வருங்கால சந்ததிகளுக்கும் வேண்டும் தண்ணீர் !
வீணாக விரயம் செய்திட வேண்டாம் தண்ணீர் !
தண்ணீரை பார்க்கும் விழியாக மதிப்போம் !
தண்ணீரை வாரிசுகளுக்கும் விட்டுச் செல்வோம் !
கருத்துகள்
கருத்துரையிடுக