முதுமுனைவர்.வெ.இறையன்பு. -----நட்பெனும் நந்தவனம் என்ற நூலில் , சுக்ரீவனுடன் நட்பு என்ற தலைப்பில் .* பழி வந்தாலும் பரவாயில்லை என்று நண்பனுக்காக வாலியை வீழ்த்திய ராமனின் நட்பு உன்னதமானது என்பதை உணர்த்துகிறார் கம்பர்.* அனுமனும் நன்றியின் உச்சத்தில் இருந்ததால் ராமனை இதயத்தில் வைத்துப் போற்றுகிறான்.நன்றியில்லாதவர்கள் எந்த உறவிலும் உண்மையாக இருக்கமாட்டார்கள்.* அனுமனே போரிடாமல் விலகிப்போன கும்பகர்ணனோடு மோதுகிற அளவிற்கு சுக்ரீவன் நட்பு பாராட்டுபவனாக மாறுகிறான்.* நண்பனின் மனநிலையையும் உயர்த்துவதே உயர்ந்த நட்புக்கான அடையாளம் .* ராமனின் மேன்மை சுக்ரீவனின் மனத்தை மாற்றி விடுகிறது.அவன் சீதையை மீட்பதைத் தன் பணியாக எண்ணிக் கொள்கிறான்.அவனுடைய அன்பு தூய்மையானதாக மாறுகிறது .* நல்ல நண்பர்கள் கடிந்துரைக்காமல் நண்பனின் தவறை உணரச் செய்து திருத்துவார்கள்.* நீட்சே கூறுவதைப்போல சில நேரங்களில் குரங்குகளிடமிருக்கிற குரங்குத்தனத்தைவிட மனிதர்களிடமிருக்கும் குரங்குத்தனம் அதிகமாகவே இருக்கிறது .* எல்லோரிடமும் மனிதநேயத்தோடு நடப்பவர்கள் மட்டுமே நண்பர்களைப் பெறுவார்கள் .தொகுப்பு நா.பார்த்த சாரதி.இறையன்பு நூலகம்.திருமங்கலம்.
கருத்துகள்
கருத்துரையிடுக