பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி.

பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இரா .இரவி. இன்னிசை சக்கரவர்த்தி ,பாட்டுத் தலைவன் ,எழிலிசை வேந்தன் பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்கள் இன்று இருந்திருந்தால் .நடிகர் அஜித் சொல்லிய வசனமான " என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா ." என்று சொல்லி இருப்பார் .கி .பி ,கி .மு . மாதிரி . பா .மு . ,பா .பி . பாடுவதற்கு முன் ,பாடுவதற்கு பின் இரண்டு வாழ்க்கை உண்டு .டி .எம் .எஸ் . அவர்களுக்கு . அதிர்ஷ்டம் என்பதே கற்பிக்கப்பட்ட கற்பனை .அப்படி ஒன்றே இல்லை. ஆபிரகாம் லிங்கன் போல வாழ்க்கையில் பல தோல்விகள் கண்டவர் .டி .எம் .எஸ் . தந்தை மீனாட்சி வரதராச பெருமாள் கோவில் அர்ச்சகர்.அவரது முதல் மனைவி இறந்து விடுகிறது .பிரோகிதம் செய்திட மனைவியை இழந்தவரை அழைப்பதில்லை .அதற்காக இரண்டாவது திருமணம் செய்கிறார் .பிளேக் நோய் வந்து அவரும் இறக்கிறார் .மூன்றாவது திருமணம் அவரின் இரண்டாவது மகன்தான் டி .எம் .எஸ்.மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் சிறிய வீடு. மின்சாராமும் தண்ணீரோ கிடையாது .தண்ணீர் வெளி குழாயில்தான் பிடிக்க வேண்டும் . கிருஷ்ணன் கோவில் தெருவில் பிறந்து தென் ஆப்பிரிக்கா ,அமெரிக்கா ,சிங்கப்பூர் போன்ற பல வெளி நாடுகள் சென்று பாடி புகழ் பெறக் காரணம் திறமை"ஏழையாய் பிறப்பது உன் தவறு அல்ல ஏழையாகவே இறப்பது உன் தவறு " . என்று பொன்மொழி உண்டு.டி .எம் .எஸ். ஏழையாகப் பிறந்தார் பணக்காரராக இறந்தார். காரணம் திறமை .கடின உழைப்பு .பயிற்சி + முயற்சி + உழைப்பு = டி .எம் .எஸ்.இவருக்கு படிக்க வசதி இல்லை ஆனால் இவர் பேரன் பேத்திகள் இன்று பொறியாளாராக இருக்கிறார்கள் .மதுரை புனித மரியன்னை பள்ளியில் 6,7, 8 வகுப்புகள் 3 ஆண்டுகள் படிக்கிறார் .உதவித் தொகை பெற்று படிக்கிறார் .பின் சௌராஷ்டிரா நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று சொல்ல 9 வகுப்பு முதல் சௌராஷ்டிரா பள்ளியில் படிக்கிறார். S.S.L.C. நுழைவுத் தேர்வில் தோல்வி அடைகிறார். அதற்குப் பின் படிக்க வசதி இல்லை .மாதம் 40 ரூபாய் சம்பளம் வேலைக்கு செல்கிறார் .அங்கு மேலாளர் பொய் கணக்கு எழுதி திருடுகிறார் .முதலாளிக்கு இந்தியில் கடிதம் எழுதுகிறார். முதலாளி மேலாளர் திருடன் என்பது தெரியும் என்கிறார் . பொய் கணக்கு எழுத மனசாட்சி இடம் தராததால் வேலையை விட்டு விலகுகிறார் .கோவில்களில் பஜனை பாடுகிறார் .பலரும் பாராட்டுகின்றனர். வாழ்க்கையில் அவர் சந்தித்த தோல்விகள் மிக அதிகம் .தோல்விக்கு துவளாமல் தொடர்ந்து முயன்று வாழ்க்கையில் வென்றவர்.தனலட்சுமி என்ற பெண்ணை காதலிக்கிறார் .அக்கா மூலம் பெண் கேட்டு அனுப்புகிறார் . தனலட்சுமி வீட்டில் வைரத்தோடு , வைர மூக்குத்தி 20 பவுன் நகை மாப்பிள்ளை போட்டால் பெண் தருகிறோம். என்கின்றனர்.ஏழையால் முடியவில்லை. காதல் தோல்வி .காதல் தோல்வி பாடல்கள் பாடும்போது மட்டும் காதலி தனலட்சுமி நினைவு வருவதுண்டு என்று நேர்முகத்தில் குறிப்பிட்டுள்ளார் .இவர் பஜனை பாடுவது கேட்டு சுமித்ரா என்ற பெண் இவரை விரும்புகிறார். அவர் வீட்டில் சொல்கிறார் .அவர் அண்ணன் உடனடியாக பணக்கார மாப்பிள்ளைக்கு இரண்டாம் தராமாக நிச்சியம் செய்கிறார். மாப்பிள்ளை நெஞ்சு வலியால் இறந்து விடுகிறார் .பின் போராடி சுமித்ரா டி எம் .எஸ் .அவர்களை மணந்தார் .தான் விரும்பியவள் கிடைக்க விட்டாலும் தன்னை விரும்பியவளை ஏற்றுக் கொண்டவர். உண்மையாக வாழ்ந்தவர் . முறைப்படி காரைக்குடி குரு .இராஜாமணியிடம் பாடல் பயற்சி பெறுகிறார்.பாடுவதற்கு வாய்ப்பு வேண்டி கோவை செல்கிறார் .அங்கு சின்னப்பாவை சந்திக்கிறார் .அவருடன் பழகுகிறார் .திரையரங்கம் செல்கின்றனர் .அவர் பீடி கட்டு வாங்கி வா என்கிறார். மனக்கஷ்டத்துடன் வாங்கித் தருகிறார் .இயக்குனர் சுந்தரராவ் மனம் வைத்தால் பாடி விடலாம் என்கின்றனர். இயக்குனர் சுந்தரராவ் மகன் மோகனுக்கு கதைகள் சொல்கிறார் . சுந்தரராவ் மனைவிக்கு மாவாட்டிக் கொடுக்கிறார் .அவர் கூட சிரமம் வேண்டாம் என்கிறார் .நன் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன் .என் அம்மாவிற்கு நான் மாவாட்டி கொடுத்து இருக்கிறேன். என்று சொல்லி ஆட்டி கொடுத்து விட்டு கணவரிடம் பரிந்துரை செய்ய வேண்டுகிறார் .அவரும் பரிந்துரை செய்கிறார் .அவர் மனம் வைத்து இசை அமைப்பாளர் சுப்பையாவை அழைத்து மதுரை தம்பி டி .எம் .எஸ் .க்கு பாட வாய்ப்பு வழங்குக என்கிறார் .போராடித்தான் வாய்ப்பு வந்தது. அதிர்ஷ்டத்தால் வர வில்லை .முதல் பாடல்" ராதே என்னை விட்டு போகாதடி" படத்தில் வந்தது. இசைதட்டில் இவர் பாடல் வரவில்லை .மாத வாடகை 10 ரூபாய்க்கு அறை பிடித்து சென்னையில் படுவதற்கு முயற்சி செய்கிறார் .வாய்ப்பு கிட்டவில்லை .கையில் 15 ரூபாய் உள்ளது .நான் மதுரைக்கு செல்கிறேன் என்கிறார் மகாதேவனிடம். அவர் H.M.V.அழைத்து சென்று பாட வைக்கிறார் .மதுரையில் இருந்து வந்த மாதிரி பேருந்துக்கட்டணம் பயணப்படி என்று சொல்லி ரூபாய் 180 வாங்கித் தருகிறார் .6 மாதம் சென்னையில் இருக்க இது போதும் என்று சொல்லி சென்னையில் இருந்து முயற்சி செய்கிறார் .கவியரசு கண்ணதாசன் அவர் எழுதிய பாடல்களான பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது , கோப்பையிலே என் குடியிருப்பு பாட்டரசன் டி .எம் .சௌந்தரராஜன் தான் பாட வேண்டும் என்று விரும்பினார்.மனக்கோட்டை கட்டதடா மனிதா என்ற கவியரசு கண்ணதாசன் பாடல் பதிவானது .படத்தில் இடம் பெறவில்லை .கலைமாமணி டி .எம் .எஸ். பேசும் பொது முருகா ! முருகா ! என்று சொல்வது வழக்கம் .அப்போது நாத்திகராக இருந்த கவியரசு கண்ணதாசன்' முருகனுக்கு எவ்வளவு வேலை இருக்கும் .அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்' என்பார் .நான் எந்த வேலை செய்தாலும் முருகனிடம் சொல்லி விட்டுதான் செய்வேன் .என்றார் .கவியரசு கண்ணதாசன் பாடலை இப்படி எழுதி இருந்தார் .கடவுள் மனித்கனாகப் பிறக்க வேண்டும் .அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும் !இந்த வரிகளைப் படித்த கலைமாமணி டி .எம் .எஸ் . நான் ஆன்மிகவாதி கடவுளை சாக வேண்டும் என்று பாட முடியாது. மாற்றித் தாருங்கள் என்றார் .எழுதியதை யாருக்காகவும் மாற்றாத கவியரசு கண்ணதாசன் கலைமாமணி டி .எம் .எஸ். அவர்களுக்காக இப்படி மாற்றி எழுதினார் .கடவுள் மனித்கனாகப் பிறக்க வேண்டும் .அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் !பாட்டுக்கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்களை திறம்படப் பாடி M.G.R க்கு புகழ் தேடித் தந்தவர்.அந்த நாள் ஞாபகம் நெஞ்கிலே வந்ததே பாடலை 4 முறை ஒடி விட்டு வந்து மூச்சு இரைக்க பாடினார் .ஞானஒளி படத்தில் வரும் தேவனே என்னைப் பாருங்கள் பாட்டில் வரும் ஆங்கில வசனத்தை வேறு ஒருவர் சொல்வதாக இருந்தது .ஆனால் நடிகர் திலகம்சிவாஜி டி.எம் .எஸ். அவர்களே ஆங்கில வசனம் சொல்லட்டும் என்றார் .அந்த அளவிற்கு திறமை மிக்கவர்.செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி " கண்ணா நீயும் நானுமா." பாடலை 15 முறை திரும்பத் திரும்ப கேட்டார் .ஏன் என்று கேட்டபோது. டி .எம் .எஸ் . உயிரைக் கொடுத்து பாடி உள்ளார் .பாட்டுக்க நான் சரியாக நடிக்க வில்லை என்றால் .மக்கள் சிவாஜிக்கு நடிக்க தெரியவில்லை என்று சொல்லி விடுவார்கள் .அதனால் பாடலை உள்வாங்குகிறேன் .என்றார் .அந்த அளவிற்கு திறமை மிக்கவர் .டி .எம் .எஸ் .அவர்கள் நாடோடிப்பாடல் ,கர்நாடக இசைப்பாடல், மேற்கித்திய இசைப்பாடல் என்று எதுவென்றாலும் திறம்பட பாடும் திறமை பெற்றவர் .பாடாத நடிகர் இல்லை என்று சொல்லும் அளவிற்கு 14 நடிகர்களுக்கு நன்கு தலைமுறைக்கு பாடிய பாட்டு இமயம். அவருடன் பல ஆண்டுகள் இருந்த பேராசிரியர் மகாதேவன் சொன்னார் 6 மணிக்கு விழா என்றால் 5 மணிக்கே முன்னதாகவே செல்லும் பழக்கம் உள்ளவர் . ஏன் இப்படி என்று கேட்டால் .முன்னதாக செல்வதால் நமக்கு என்ன நஷ்டமொன்றுமில்லை . என்பார் .நேரத்தை சரியாக கடைபிடித்த திறமையாளர் .மிக மோசமான ஒலிவாங்கி ( மைக் ) அமைவதுண்டு .அதற்காக விழா ஏற்பாட்டாளர்கள் மீது கோபம் கொள்ளாமல் மிகவும் சிரமப்பட்டு மிகச் சிறப்பாக பாடி விடுவார் .திறமை மிக்கவர் . .எதிர்நீச்சல் படத்தின் பாட்டின் மெட்டை மாற்றினால் நன்றாக இருக்கும் என்கிறார் .படத்தின் இயக்குனர் பாலசந்தர் ஏதோ கோபத்தில் அதேமெட்டில் பாடச் சொல்லுங்கள் .இல்லாவிட்டால் வீட்டுக்கு சொல்லுங்கள் என்கிறார் .போய் விடுகிறார் .கொஞ்ச நாட்கள் கழித்துவேறு படத்திற்கு பாட வேண்டும் என்று இயக்குனர் பாலசந்தர் வேண்டுகோள் வைத்ததும் பழைய நிகழ்வை மறந்து பாடி விடுகிறார்.தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் தேசியகீதம் பாடினார் .கடைசியாக செம்மொழி மாநாட்டுப் பாடலும் பாடினார் .இன்று ஒவ்வொரு விழாவிலும் அவர் பாடும் பாடலுக்கு எல்லோரும் எழுந்து நிற்கிறோம். காரணம் அவர் திறமை .மூன்று முதல்வர்களுடன் பழகியபோதும் யாரிடமும் எதுவும் கேட்காத சுயமரியாதை மிக்க மாமனிதர் .அவருடைய இன்னிசை கச்சேரி கேட்பவர்களுக்கு அவர் பாடுகிறாரா ? இல்லை இசை தட்டு ஓடுகிறதா ? என்று வியக்கும் அளவிற்கு மிக நுட்பமாகப் பாடும் திறமை மிக்கவர் .பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே !

கருத்துகள்