31.3.2024. மரக்கன்று நடுதல் மற்றும் பறவைகளுக்கு நீர் வைத்தல் நிகழ்வு .மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில்
31.3.2024. மரக்கன்று நடுதல் மற்றும் பறவைகளுக்கு நீர் வைத்தல் நிகழ்வு .மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில்
யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 156 ஆவது வார நிகழ்வாக மரக்கன்று வைத்தல் மற்றும் பறவைகளுக்கு நீர் வைத்தல் நிகழ்வு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. ஆலோசகர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா. ரவி, வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன், தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெற்ற அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக கவிஞர் இரா. ரவி அவர்களுக்கு *ஹைக்கூ விருது*
வழங்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தில் புங்கை, கொய்யா ஆகிய மரங்கள் நடவு செய்யப்பட்டன. மேலும் அங்குள்ள பறவைகள், மயில்களுக்கு தண்ணீர் வைக்கப்பட்டது. தானியங்கள், அரிசி தூவப்பட்டது. ஆலோசகர்கள் ராகேஷ், சிலம்ப மாஸ்டர் பாண்டி, அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில், சமூக ஆர்வலர்கள் ரமேஷ், சசிகுமார், பரமேஸ்வரன் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் நலினா, ரித்திகா ஆகியோர் நன்றி கூறினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக