நல்லாசிரியர் சுலேகா பானு

தமிழக அரசின் " தமிழ்ச் செம்மல் விருது " பெற்ற மதுரையின் ஹைக்கூ கவிஞர் இரா. இரவி. அவர்களை சந்தித்து எங்கள் அன்பின் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தோம்.💗💐 சிறந்த பண்பாளர் ; நேர்மையாளர் ; எந்த நேரத்தில் எந்த தகவலைக் கேட்டாலும் தயங்காமல் கூறி உதவி செய்யக் கூடிய நல்ல உள்ளம் கொண்டவர். 2018 ல் நாங்கள் கொல்கத்தாவிற்குச் சுற்றுலா சென்ற போது எங்களுக்கு அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அலுவலரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து உதவியது , என்றும் மறக்க முடியாது. கவிஞர் இரா.இரவி அவர்கள் எழுதிய "கட்டுரைக் களஞ்சியம்" என்ற நூலினை வழங்கி மகிழ்ந்தார்.👍 🙏🏼 நல்லாசிரியர் சுலேகா பானு

கருத்துகள்