தமிழ்ச்செம்மல் விருது பெற்றமைக்கு சென்னை மாநகர காவல் துணை ஆணையர் கவிஞர் முனைவர் ஆ மணிவண்ணன் அவர்கள் இன்று காலையில் அவரது அலுவலகத்தில் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார்கள்.23.2.2024

இன்று 23.02.24 ஆம் தேதி காலை எனது அலுவலகம் வந்த ஹைகூ திலகம் " தமிழ்ச் செம்மல்" இரா. இரவி R Ravi Ravi அவர்கள் நேற்று 22.02.24 ஆம் தேதி மாநில தலைநகர் சென்னையில் மாண்புமிகு தமிழக தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் பெருந்தகை கையால் பட்டம் பெற்றவர் இன்று சென்னை அலுவலகம் வருகை தந்தார். விருது பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து பெருமை பட்டேன். அவர் எனது பதவி உயர்விற்கும் வாழ்த்தி மகிழ்ந்தார். உலக தமிழ் ஆர்வலர்களின் நடமாடும் பெட்டகம். என்னையும் விட தமிழுக்காக அதிகம் உழைத்தவர் அதனால் அரசு அங்கீகரித்து தமிழ்ச் செம்மல் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. நான் வருகின்ற வைகாசி மாதம் எனது தாயாரின் பெயரில் தொடங்க உள்ள திருமதி கே‌.ஆர்.செல்லம்மாள் உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்க எத்தனித்துள்ளேன்.சென்னை மாநகர காவல் துணை ஆணையர் கவிஞர் முனைவர் ஆ மணிவண்ணன் அவர்கள்

கருத்துகள்