ேராசிரியர் வே. கருணாநிதி அவர்கள் மறைவு.ஆழ்ந்த இரங்கல்.

பேராசிரியர் வே. கருணாநிதி அவர்கள் மறைவு புதுச்சேரி தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் வே. கருணாநிதி அவர்கள் நேற்று (11.01.2024) சென்னையில் இயற்கை எய்திய செய்தியறிந்து பெருந்துன்பமுற்றேன். பேராசிரியரின் சொந்த ஊரில் இன்று உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பேராசிரியர் வே. கருணாநிதி அவர்கள் தேனி மாவட்டம் கோட்டூரில் பிறந்தவர். மதுரை செந்தமிழ்க் கல்லூரி, யாதவர் கல்லூரிகளில் தமிழ் பயின்றவர். காரைக்கால் அறிஞர் அண்ணா கல்லூரி, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கோட்டூரான் என்ற புனைபெயரில் கவிதைகள், கட்டுரைகள் வரைந்தவர். பல்லாயிரம் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்த பெருமைக்குரிய பேராசிரியர் வே.கருணாநிதி அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

கருத்துகள்