இங்கிலாந்திலிருந்து, சங்கர் 🎋

இன்றைய பொங்கல் திருநாளில் பென்னி குயூக் என்கிற தொண்டுள்ளம் படைத்த மாபெரும் மனிதனின் பிறந்த நாள்..., முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தின் வளத்திற்கு வித்திட்ட பெருமகனின் சேவையை நன்றியுடன் நினைவுகூறும் வகையில் கர்னல் பென்னிகுயிக் அவர்களுக்கு, லண்டனில் உள்ள ஃபிரிம்ளே பகுதியில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தின் மயான மைதானத்தில் அவர் பூத உடல் புதைக்கப்பட்ட கல்லறைக்கும், மதிப்புக்குரிய விஸ்வநாதன் ஐபிஏஸ் அவர்களால் நிறுவப்பட்ட மார்பளவு சிலைக்கும், தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் அர்பணிக்கப்பட்டு, பென்னி குயூக் அவர்கள் இறந்த நகரமான கெம்பெர்லி நகர பூங்காவில் நிறுவப்பட்ட திருவுருவ சிலைக்கும், இன்று (15.01.2024) நானும் எனது நண்பர்களான லிங்கேஷ், சாந்தன், கோபிநாத் மற்றும் ராஜேஷ் ஆகிய ஐவரும், பூங்கொத்து வைத்து, சந்தன மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தோம். ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால் தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது. இன்றைய நாளில்.., நீர் இருக்கும் வரையிலும் நம் நினைவில் நிற்கும் உத்தமருக்கு உரிய மரியாதை செய்து வந்த திருப்தியும், நெகிழ்ச்சியும் மனது முழுவதும் நிறைந்திருக்கிறது.. பென்னி குயிக் நாட்குறிப்பில் எழுதப்பட்டதாகக் சொல்லப்படுகிற வாசகம்.., ‘இப் புவியில் நான் வந்து செல்வது ஒரு முறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். இதைத் தள்ளி வைப்பதற்கோ, தவிர்ப்பதற்கோ இடம் இல்லை. ஏனெனில், மீண்டும் ஒரு முறை நான் இப் புவியில் வரப்போவது இல்லை!’ இங்கிலாந்திலிருந்து, சங்கர் 🎋

கருத்துகள்