தமிழ் உயரத் தமிழன் உயர்வான்!
- கவிஞர் இரா. இரவி
*****
தமிழ் உயர என்ன வழி சிந்திப்போம்
தமிழை உயர்த்துவது தமிழரின் கடமையாகும்!
எதைச் செய்தாலும் தமிழில் செய்வோம்
அர்ச்சனை ஆராதனை அனைத்தும் தமிழாகட்டும்!
தமிங்கில உரையாடலுக்கு முடிவு கட்டுவோம்
தமிழைத் தமிழாகவே பேசிப் பழகுவோம்!
உயர்நீதி மன்றங்களில் தமிழில் வழக்காடுவோம்
உயர்நீதி மன்றத்தில் தமிழே ஒலிக்க வேண்டும்!
வணிக நிறுவனங்களில் தமிழ் இடம் பெறட்டும்
விளம்பரப் பலகைகளில் தமிழே முதன்மையாகட்டும்!
உலகின் முதல்மொழி நம் தமிழ் என்பதை
உலகத் தமிழர்கள் யாவரும் உணர வேண்டும்!
முதல்மொழி தமிழை உருக்குலைய விடலாமா?
முத்தமிழை வளர்ப்பது தமிழரின் கடமையன்றோ?!
தேமதுரத் தமிழோசை இல்லங்களில் ஒலிக்கட்டும்
தன்னிகரில்லா தமிழைப் போற்றி வளர்த்திடுவோம்!
தமிழோடு பிறமொழி கலப்பதை நிறுத்திடுக
தமிழை தமிழாகவே பேசிப் பழகிடுவோம்!
தமிழ்வழிக் கல்வியை நாளும் வலியுறுத்துவோம்
தாய்மொழிக் கல்வியே குழந்தையை அறிவாளியாக்கும்!
தமிழ் படித்தால் இளமை இருக்கும் முதுமை வராது
தமிழை அனைவரும் விரும்பி படிக்க வைப்போம்!
உயரத் தமிழன் உயர்வான் உணர்வாய்
தமிழை உயர்த்த அணிவகுப்போம் வருவாய்!
கருத்துகள்
கருத்துரையிடுக