மகிழ்வான தகவல் .நன்றி இனியநண்பர் ஹிதாயத் .துபாய்

துபாய் நகரின் அல் ஜடாப் பகுதியில் புத்தக வடிவில் உள்ள பிரமாண்ட நூலகம் முஹம்மத் பின் ராஷித் நூலகம் ஆகும். ஏழு மாடிகளைக் கொண்ட இந்த நூலகமானது பொது நூலகம், குழந்தைகளுக்கான நூலகம், வர்த்தக நூலகம், கண்காட்சி மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கொண்டுள்ளது. இந்த நூலகத்தில் மதுரைக் கவிஞர் இரா. இரவி எழுதிய 'தீயவை தீண்டாதே' என்ற கவிதை நூல் தமிழ்ப் பிரிவில் இடம் பெற்றுள்ளது. மேலும் தந்தை பெரியார், கலைஞர் மு. கருணாநிதி, கவிஞர் வைரமுத்து, முதுமுனைவர் வெ. இறையன்பு உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்களின் நூல்களும் இங்கு உள்ளது. இந்த நூல்களை பொதுமக்கள் படிக்க விரும்பினால் நூலகத்தின் வரவேற்பரைக்கு சென்று கேட்டால் 10 நிமிடங்களில் அவர்களுக்கு நூல்கள் படிக்க வழங்கப்படும். இதனை அமீரக வாழ் தமிழ் அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஹிதாயத். துபாய்.

கருத்துகள்