கட்டுரைக் களஞ்சியம். ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா.

கட்டுரைக் களஞ்சியம். ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.வாழ்வில் உயர்ந்தோர் விடாமுயசியால் தான் உயந்தனர், விதி என்பது நம்மை வீழ்த்த வீணர்கள் விரித்த சதி, விதியை மதியால் வெல்லலாம் என வள்ளுவர் உணர்த்திய வாய்மையும், கக்கன்ஜியின் நேர்மையும், இரண்டெழுத்து இனியவரின் ஆளுமையும், துறவியின் தகுதியினை உணர்த்திய தவத்திரு, வள்ளுவரும், உங்களை பட்டிமன்றத்திலும் முத்திரை பதிக்கவைத்த இரா. மோகன் ஐயா பற்றியும், பா.பி, பா.மு. என்ற கம்பீர குரலுக்கு சொந்தக்காரரையும், உயர்வுக்கு காரணம் திறமையும் உழைப்பும் என்பதும், காலையில் சிரித்தபடி பூத்து மாலையாகி பலரை மகிழ்வித்து மாலையில் வாடிப்போகும் மலர்கள் கூட போராடுகிறது, மனிதா உனக்கேன் சோம்பேரித்தனம் என்ற கவிஞர் பா. விஜய் அவர்களின் வரிகள், மனைவியை இழந்தா நீ யார் என்ற கேள்வியும், தமிழ் சொல்லின் சிறப்பும், ஹைக்கூவின் வியப்பும், நானும் மதுரைக்காரன்டா என்ற பெருமையும், பாரதியின் கனவும், கலாம் ஐயாவுடன் ஏற்பட்ட பழக்கமும், புலிப்பால் கவிஞரே தங்களின் கட்டுரை களஞ்சியம் ஓர் பொக்கிஷம். உன் நண்பன் யார் என சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள், உங்களின் நட்பை பார்த்து வியந்தேன். வாய்புக்கு நன்றி.

கருத்துகள்