என்றன் தோழன் இரா. இரவி
புதுவைத் தமிழ்நெஞ்சன்
ஆழியின் அலையாய் ஓயா தெழுதும்
ஆற்றல் மிக்க அறிவன்பன்
வீழ திங்கே வீறுடன் எழுதுகோல்
விடியல் தந்திடும்
ஒளியன்பன்
மண்ணைப் பிளக்கும் மதிமிகு விதையாய்
மாண்பாய் எழுதும் மதியழகன்
விண்ணைத் தொட்டிடும் வானவில் போல
வடிவாய் இருக்கும்
எழிலழகன்
பல்துறை தன்னில் பாதம் பதித்து
பட்டொளி வீசும் பரிதியன்பன்
நல்மனம் கொண்டு நற்றமிழ் பேணும்
நண்பன் தோழன்
இரவியன்பன்
இரவை விரட்டும் இருவிழி பரிதி
இவனிடம் உண்டு நானறிவேன்
உறவாய் உயிராய் உணர்வினிலே
ஊன்றி நிற்கிறான்
நானறிவேன்
படைப்பு உலகில் பரிதி யாக
பாதை போட்டான் நானறிவேன்
தடைகள் உடைத்து தடுவிடு பொடியாய்
தணலென நிமிர்ந்தான்
நானறிவேன்
அகத்தால் எதையும் அறிவாய் செய்யும்
அன்பன் பண்பன் நானறிவேன்
இகத்தை வெல்லும் இனிய நெஞ்சன்
இரவி தோழன்
நானறிவேன்
கருத்துகள்
கருத்துரையிடுக