26.11.2023 அன்று காலை மாதுரைக் கவிஞர் பேரவையின் சிந்தனைக் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது

26.11.2023 அன்று காலை மாதுரைக் கவிஞர் பேரவையின் சிந்தனைக் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். புரட்சி க் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் மூன்று கவிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார் துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், முன்னிலை .வகித்தார் மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் விருதுக் கேடயம் கொண்டு வந்து வாழ்த்துரையாற்றினார் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில்" செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே " என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள் , செ.அனுராதா , இராம பாண்டியன், சாந்தி திருநாவுக்கரசு ஆகியோர் கவிதை பாடினார்கள் . சிறந்த கவிதை வாசித்த இரா .கல்யாணசுந்தரம் , ச .லிங்கம்மாள் ,கு .கி .கங்காதரன் ஆகியோர் புரட்சி க் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதாசன் அவர்களிடமிருந்து விருது பெற்றனர் . தமிழரின் தொன்மை" என்ற நூலை வருகை தந்த அனைவருக்கும் கவிஞர் இரா .இரவி அன்பளிப்பாக வழங்கினார். படங்கள் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

கருத்துகள்