படித்ததில் பிடித்தவை.கவிஞர் இரா.இரவி.#புத்தகத்தின்_மகத்துவம்📚📓

படித்ததில் பிடித்தவை.கவிஞர் இரா.இரவி.#புத்தகத்தின்_மகத்துவம்📚📓📚 ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் #மகாத்மா.. கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் #தந்தை_பெரியார்.. தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் #ஜவஹர்லால்_நேரு.. என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் #பெட்ரண்ட்ரஸல்.. மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் #ஆல்பர்ட்_ஐன்ஸ்டீன்... வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் #நெல்சன்_மண்டேலா... பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி #லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம் ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் #சார்லிசாப்லின்... ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் #வின்ஸ்டன்_சர்ச்சில்... பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் #மார்டின்_லூதர்கிங்.. தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் #பகத்சிங் .. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். #ஆபிரகாம்_லிங்கன்... ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி! #ஜூலியஸ்_சீசர்.. உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்.. #டெஸ்கார்டஸ். போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு… #இங்கர்சால்.. சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்! #பிரான்சிஸ்_பேக்கன்.. புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே! #லெனின்.. உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை! #ஆஸ்கார்_வைல்ட்.. உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! #சிக்மண்ட்_ஃப்ராய்ட்.. பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ… #மாசேதுங்.. கல்வி கற்போர்களாக இருங்கள் பின்பு கற்பிப்பவர்களாக இருங்கள் #நபிகள்_நாயகம்.... நலமாய் #வாசிப்போம்..! வளமாய் #வாழ்வோம்..!

கருத்துகள்