ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவுவிழாவில் முனைவர் வெ. இறையன்பு ஐஏஎஸ் விழாப் பேருரை…

ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவுவிழாவில் முனைவர் வெ. இறையன்பு ஐஏஎஸ் விழாப் பேருரை… 19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவுவிழா15.08.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி. துரைசாமி தலைமையேற்றார். இயக்குநர் சாந்திதுரைசாமி முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரை நிகழ்த்தினார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் பன்முக ஆளுமையாகத் திகழும் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நிறைவுவிழாப் பேருரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், பல்வேறு அறிஞர்களின் கருத்துக்கள், குழந்தைகளின் கல்வி குறித்த மாற்றுச் சிந்தனை, பல்வேறு புத்தகங்கள் பற்றிய அறிமுகம், வாழ்வின் அழகியல் குறித்த விவரிப்பு என ஆழமானதோர் உரை நிகழ்த்தினார். காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் ஐபிஎஸ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் பு.ஜானகி இரவீந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் ஜே.அ.குழந்தைராஜன், பபாசி தலைவர் எஸ்.வைரவன், மாவட்ட நூலக அலுவலர் இரா.யுவராஜ், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மக்கள் சிந்தனைப் பேரவையின் துணைத்தலைவர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் , வாசகர்கள் எனப் பல்லாயிரம்பேர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

கருத்துகள்