தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி

தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி ***** தாயின் வயிற்றிலிருக்கும்போதே கற்கும் மொழி தாய்மொழி போல் மற்ற மொழி புரிவதில்லை! தாய்மொழியில் சிந்தித்தால் சாதனைகள் புரியலாம் தாய்மொழியில் படித்தவர்கள்தான் சாதனையாளர்கள்! மயில்சாமி அண்ணாத்துரை படித்தது தாய்மொழியில் மட்டற்ற அறிவியலாளர் சிவன் பயின்றதும் தாய்மொழியே! மாமனிதர் அப்துல்கலாம் பயின்றது தாய்மொழியில் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் தமிழ் பயின்றால் ! உலகமொழிகளில் அனைத்திலும் தமிழ்சொற்கள் உலகிற்கு சொற்கள் தானம் தந்த மொழி தமிழ்மொழி! ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள் அந்நிய மொழிகள் அனைத்திலும் தமிழ்ச்சொற்கள்! சந்திரயான்களின் சாதனையாளர்கள் பயின்றது தாய்மொழி சாதிக்க உற்றுளி உதவியது உன்னத தாய்மொழி! வனிதா சுப்பையா, அருணன். வீர.முத்துவேலன் வழிவழியாக பயின்றது ஆரம்பக்கல்வி தமிழில் ! சந்திரயான் சாதனைகளுக்கு காரணம் தமிழ்மொழி சகலரும் அறிந்திடுங்கள் அற்புத மொழி தமிழ்மொழி! உலகில் எல்லா மூலையிலும் ஒலிப்பது தமிழ்மொழி ஒரு நாடு கூட தமிழ் ஒலிக்காத நாடே இல்லை! உலகம் முழுவதும் பரந்து விரிந்தது தமிழ்மொழி உலகமொழிகளின் மூலமாக விளங்குவது தமிழ்மொழி! தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே முதன்மை தாயைப்போல காத்திடுவோம் நம் செம்மொழி தமிழை! ******

கருத்துகள்