விஞர் மகுடேசுவரன் (வலைக்குறுங்காட்சி மொழிபெயர்ப்பு)வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமா ? இந்தப் பத்துக் கட்டளைகளைப் பின்பற்றிப் பாருங்கள்
வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமா ?
இந்தப் பத்துக் கட்டளைகளைப் பின்பற்றிப் பாருங்கள் !
OO
1). விட்டேற்றியாய்த் திரிவதிலிருந்து அகன்று திட்டவட்டமான ஒழுங்கிற்குள் வாருங்கள்.
2). எப்போதும் பாதுகாப்பான வட்டத்திற்குள் இருந்தபடியே காய்களை நகர்த்தாதீர்.
3). நோகாது நோன்பு கும்பிடும் செயல்களை விட்டுவிட்டு ஓர் இடர்ப்பாடு மிக்க செயலில் இறங்குங்கள்.
4). நேற்றைய உங்களை மட்டும் இன்றைய உங்களோடு ஒப்பிடுங்கள்.
5). துணிந்து இறங்கிய ஒன்றிலிருந்து எப்போதும் பின்வாங்காதீர்கள்.
6). தெள்ளத்தெளிவான குறிக்கோள்களை வகுத்துக்கொள்ளுங்கள்.
7). உங்கள் வாழ்க்கையைப் பற்றிய தொலைநோக்கினைக் கொண்டிருங்கள்.
8 ). பேசுவதில் எப்போதும் கடைசி ஆளாக இருங்கள்.
9). மிகுதியாய்ப் படியுங்கள்.
10). எந்தச் சூழ்நிலையிலும் நன்றி பாராட்டுவதில் சிறந்து விளங்குங்கள்.
- கவிஞர் மகுடேசுவரன்
(வலைக்குறுங்காட்சி மொழிபெயர்ப்பு)
கருத்துகள்
கருத்துரையிடுக