மக்கள் மாற வேண்டும் . கவிஞர் இரா .இரவி !

மக்கள் மாற வேண்டும் . கவிஞர் இரா .இரவி ! மதுரை அருகே உள்ள மேலூர் தும்பைப்பட்டியில் பிறந்த கக்கன் வரலாறு கூறும் திரைப்படம் " கக்கன்" வந்தது .ஒரு வாரம் கூட ஓடவில்லை .வெள்ளிக் கிழமை வந்தது .புதன் கிழமை நேற்று கேட்டபோது ஆட்கள் வரவில்லை படத்தை எடுத்து விட்டோம் என்கிறார்கள் .மதுரையில் கூட பார்க்க ஆள் இல்லை கேட்டு வேதனை அடைந்தேன் கக்கன் அவர்கள் நேர்மையின் சிகரம் .கர்மவீரர் காமராசரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்.வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர் .அறம் நேர்மை மேன்மை .உண்மை கூறும் திரைப்படம் பார்க்க ஆள் இல்லை .ஆனால் பிரபல நடிகர்களின் மசாலா குப்பைப்படம் பார்க்க கூட்டம் .கூட்டம் .கோடிகளை அள்ளிக் கொடுக்கின்றனர் .மக்கள் மாற வேண்டும் . நடிகை அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம் போடுவதை பார்க்க கூடுது கூட்டம்.வேதனையாக உள்ளது . அரசாங்கமாவது கக்கன் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிட ஆணை வழங்க வேண்டுகிறேன் .மாமனிதர் கக்கன் வரலாறு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் . .கக்கன் போன்ற திரைப்படங்கள் ஓடினால்தான் .அடுத்து நல்ல படம் எடுப்பார்கள் .இது ஓடவில்லை என்றால் அடுத்து குப்பை மசாலாப்படம் எடுக்க சென்று விடுவார்கள் . மக்கள் மாற வேண்டும் .

கருத்துகள்