அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்களின் படத்திற்கு மாலை அணிவிப்பு. தன்னலம் கருதாமல் எழுபதாண்டு காலம் தமிழுக்குத் தொண்டாற்றிய " தமிழ்த் தென்றல் " திரு.வி.க அவர்களின் 141 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் 26.08.2023 காலை 10.00 மணி அளவில் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் " தமிழ்த் தென்றல்" திரு.வி.க அவர்களின் படத்திற்கு மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் மாலை அணிவித்தார்கள். புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் திரு.பி. வரதராசன் அவர்கள் திரு.வி.க அவர்களின் தமிழ்த் தொண்டினை பாராட்டி புகழுரை உரை நிகழ்த்தினார். நிகழ்வில் மன்றத்தின் புரவலர் அரிமா மகா. கணேசன், மன்றத் துணைச் செயலாளர்கள் திரு. போடி காமராசு, திரு. லெ. முருகேசன், செயற்குழு உறுப்பினர்கள் திரு. இல. வெள்ளைச்சாமி, திரு.ரெ. கார்த்திகேயன், திரு. ச. செல்வக்குமரன் சிறப்பு அழைப்பாளர்கள் தலைமைக் கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாநிலத் துணைச் செயலாளர் திரு. வீரகணேசன், திரு. கா.ரா. முருகேசன், ஆனந்தம் அரிமா சங்கப் பொருளாளர் திரு. மீ. வாசுதேவன், திரு. குமார்,கவிஞர் இரா.இவி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக