மாமனிதர் முதுமுனைவர் வெ இறையன்பு இ .ஆ .ப . அவர்களுடன் மலரும் நினைவுகள்

மலரும் நினைவுகள் ! மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் படைப்புலகம் கருத்தரங்கம் கட்டுரை வாசிப்பு நடந்தது .நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நம் சீனிவாசன் அவர்கள் கட்டுரை வாசிப்பு க்கு என்னை ( கவிஞர் இரா .இரவி ) தலைமை தாங்க சொன்னபோது சற்று தயங்கினேன் .முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் பெரும்பாலான நூல்களுக்கு இணையத்தில் விரிவான விமர்சனம் பதிவு செய்து இருக்கிறீர்கள் .அமருங்கள் என்றதும் அமர்ந்தேன் .தமிழ்த் துறைத் தலைவர்கள் ,பேராசிரியர்கள் ,முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கட்டுரை வாசித்தனர் .விவாதம் நடந்தது .கேள்வி பதில் வந்தது .பல அரங்கில் நடந்தது .ஒரு அரங்கிற்கு பார்வையிட முனைவர் வெ.இறையன்பு அவர்கள் போது எழுந்து நின்றேன் முனைவர் வெ.இறையன்பு பார்வையாளர் கேள்விக்கு அவர் பதில் சொன்னபோது எழுந்து நின்றார் என்னை அமருங்கள் என்று ஆணையிட்டு விட்டு அவர் நின்றபடி பதில் சொன்னார் .அவர்களுக்கு உயர்ந்த பண்பு கண்டு வியந்தேன் .என் வாழ்நாளில் மறக்க முடியாத இந்த புகைப்படத்தை அலைபேசி வழி எடுத்தவர் இனிய நண்பர் முனைவர் .வா நேரு .இவர் முனைவர் வெ.இறையன்பு அவர்களின் படைப்பை ஆய்வு செய்து முனைவர் .பட்டம் பெற்றவர் இவரை ஆய்வுக்கு நெறிப் படுத்தியவர் இனிய நண்பர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன்

கருத்துகள்