"தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மூரா !

"தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மூரா ! வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com பக்கங்கள் 84. விலை ரூபாய் 70 விருதுகள் வியக்கும் ஒருவர், 30 நூல்கள் தந்த அதிசய மனிதர். வாசித்தலையும் எழுதுதலையும் தன் இரு கண்ணாய் போற்றிய நல்லவர். இனிய நண்பர் இரா. இரவி இந்நூலின் தலைப்பின் வழியே தனக்கும் தமிழுக்கும் உள்ள உறவை நம் மனதில் ஆழப்பதிந்து விடுகிறார். வள்ளுவம் உடலாக, தமிழே உயிராக வாழும் பிழையற்ற மனிதர் இரா.இரவி. இந்நூல் வாசித்து முடிக்கப்படும் போது உடலும், உள்ளமும் நிமிரும், அகத்தில் கர்வம் கூடும், நான் தமிழன், எனது மொழி உலகின் மிகச்சிறந்த மொழி தமிழ் எனப்பாடி ஆடத்தோன்றும். ஒழுக்கத்தை உயிருக்கு மேலாகச் சொல்லிய தமிழ் ஒப்பற்ற வீரத்தை உலகிற்கு ஓதிய தமிழ் ஆகா, எத்தனை உண்மையான உறுதிமொழி. உலகின் முதல் மொழி தமிழ் உரைப்பது தமிழரல்ல, உலகின் மொழி ஆய்வாளர்கள் உரைத்திட்ட உண்மை. இத்தகைய அரும்பெருமையும் பழம்புகழும் கொண்ட தமிழைக் காக்க நாம் என்ன செய்யலாம்? “தமிழராய் பார்த்து திருந்தாவிட்டால் தமிழை வளர்க்க முடியாது” எத்துணை தீர்க்கமான வரிகள். ஈரடியில் கீழடியின் பெருமைய அப்படியே தூவிவிட்டுச் செல்கிறார். “உலக நாகரீகம் அனைத்தும் இன்று உன்னத கீழடிக்கு கீழ் என்றானது”. உலகம் வியக்கும் உன்னத மொழிக்கு உரிய நம் மூத்தோரின் கலை, இலக்கிய, சமூக, பொருளாதார, கணித, அறிவியலுக்கும் மூத்தோனே’ “தொழிற்கூடம் அமைத்து வாழ்ந்து வந்தான் தமிழன் என்பதை மெய்ப்பித்துள்ளது கீழடி”. ஒவ்வொரு தமிழரும் விலைகொடுத்து வாங்கி படித்துப் பாதுகாக்க வேண்டிய செம்மாந்தர் பெருமைமிகு நூல் “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” வாசிக்கலாமே. *****

கருத்துகள்