இளமை இனிமை புதுமை நூல் ஆசிரியர் கவிஞர் திரு.இரா.இரவி ! நூல் மதிப்புரை அ.அருள்மொழிவர்மன் (69) திருமங்கலம்.
இளமை இனிமை புதுமை
நூல் ஆசிரியர் கவிஞர் திரு.இரா.இரவி !
நூல் மதிப்புரை அ.அருள்மொழிவர்மன் (69)
திருமங்கலம்.
வெளியீடு : வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை – 600 017. பக்கங்கள் : 92 (மே 2023) விலை : ரூ.100 பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
எனது மேன்மையான மதிப்பிற்குரிய கவிஞர் திரு.இரா.இரவி அவர்க ளுக்கு
வணக்கத்துடன் அ.அருள்மொழிவர்மன் எழுதுவது.தாங்கள் மகிழ்வோடு ஜூலை 06-2023 மதுரை நகைச்சுவை மன்ற நிகழ்ச்சியில் அளித்த தங்களது"இளமை இனிமை புதுமை"நூல் படித்து இதயம்
மகிழ்ந்தேன்.காதலைப்பற்றி ஐம்பத்து
ஆறு கவிதைகள் அற்புதமான படைப்பு
என்னைச் சிலிர்க்க வைத்த வரிகள் சில
நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்.
கர்வம் தந்து
கர்வம் தகர்க்கும்
காதல்
பிரித்தாளும் சூழ்ச்சிக்கு
பலியாகாமல் இருப்பதே
காதல்
விழிகள் விழியே சென்று
விசித்திரம் புரிகின்றன உள்ளே
அவளை சந்தித்ததும்
நம்பனேன் சொர்க்கத்தை
தனிமையில் பேசவைக்கும்
பாசவலை
சகாராவில் பாய்ந்த
நயாகரவாக
காளையின் உடலில் வேதியியல்
மாற்றங்கள்
அப்பாடா அத்தனையும் கனிச்சுவை
இளந்தென்றல்
தங்களைப் பாராட்டி வணங்கி
மகிழ்கிறேன்.
ஏர்வாடியாரின் அணிந்துரையும்
நிறைவு தருகிறது.
அழகுற தங்களின் நூல்களைத் தொடர்ந்து
வெளியிடும் வானதிக்கும் நல்வாழ்த்துக்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக