அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் ‌‌ ‌ மதுரை

இலக்கிய வேந்தர் தமிழ் மொழிக் காவலர் கலைஞர் அவர்களின் நூறாவது ஆண்டு பிறந்த நாள் அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் சமூக நீதிக் காவலர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு ‌‌ தொடங்குவதை முன்னிட்டு வரும் தி.பி.2054 விடை (வைகாசி) 20 (3.06.2023) காரி(சனி)க் கிழமை காலை 9.30 மணி அளவில் மதுரை சிம்மக்கல் ரவுண்டா பகுதியில் அமைந்துள்ள " முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு " மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது. மன்ற நிர்வாகிகள் - தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவண் அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் ‌‌ ‌ மதுரை

கருத்துகள்