இளமை இனிமை புதுமை!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!
நூல் மதிப்புரை :
பேராசிரியர் இராமமூர்த்தி !
வெளியீடு : வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை – 600 017.
பக்கங்கள் : 92 (மே 2023) விலை : ரூ.100
******
இந்த நூலில் மொத்தம் 56 தலைப்புகளில் “காதல் என்று தொடங்கி காதலிலேயே” முடிக்கும் இரவியின் எழுத்து நன்று.
அணிந்துரை : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
மகாகவி பாரதி போல், தனக்குத் தொழில் கவிதை என்பது போல, ஹைக்கூ கவிதைகள் இயற்றி கவிஞர் இரவி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். மானுடத்தின் மீதும் ஈடுபாடு உள்ளது போல், காதலிலிலும் அவருக்கு ஈடுபாடு உள்ளது போல் காட்டுகிறது இந்த நூல். தூங்காத எறும்பு போல் எந்நேரமும் காதல் கொண்டேன் எனவும் கூறுகிறார். பல உயிரினங்களையும் காதலுக்கு துணைக்கு அழைத்துள்ளார்.
இரவி தன் என்னுரையில் 29-ஆவது நூல் : அணிந்துரை வழங்கிய் ஏர்வாடியார் தான் இந்த நூலுக்கு உந்துதல் என்கிறார்.
என்னைக் கவர்ந்த சில காதல் வரிகளை, உங்களுக்கு பகிர்வதில் மகிழ்கிறேன்.
1. “மூளையின் மூலையில் இடஒதுக்கீடு காதல்”.
2. “காதலர் தினத்தில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் நினைப்பதே காதல்”.
3. “புற அழகால் வருவதல்ல; அக அழகால் வருவது காதல்”.
4. “அழகால் கொத்தும் பாவை ”.
5. “நத்தை போல் 3 ஆண்டுகள் அல்ல ; உன்னுடன் கட்டி அணைத்து பல ஆண்டுகள் தூங்கலாம்”.
6. “மனம் செம்மையாகும் ; குணம் சீராகும் ; தீய பழக்கங்கள் தூர விலகும் – காதல்”
7. “மாதா, பிதா, குரு, நண்பன், அனைவரையும் பின் தள்ளி முந்தினாள், அவள்”.
8. “தூங்கவிடாமல் செய்யும் கனவலும் அவள்” – என தன் நிலைக்காக கலாமிடம் மன்னிப்பு கேட்பதாக கவிதை.
9. புத்தரை பிடிக்காமல் போனதற்கான காரணம்
“ஆசையை அறவே அழி” என்பதால்.
10. “பட்டுக்கு எதற்கடி பட்டு” – அழகான வரி.
11. “சகாராவில் பாய்ந்த நயாகராவாக அவள் முத்தம்”
12. “புகைப்படத்தை அஞ்சலில் அனுப்பாதே ; மின் அஞ்சலில் அனுப்பு”
– அஞ்சல்காரர் அஞ்சலில் பதிக்கும் முத்திரை, தனக்கு வலிக்கும் என்கிறார்”.
13. அறிவில் அவள் அறிவாளி, அவள் முன் நான் கோமாளி”
14. “பார்த்தல், பேசல், தீண்டல் - தொடர்கதையானது”.
15. “அவள் இருக்குமிடம் இதயமல்ல ; மூளை என்று தெரிந்ததும், இப்போது தேநீரை சூடாகவே குடிக்கிறேன்”
16. “உண்மைக் காதல்” ஒருவழிப்பாதை. திரும்ப முடியாது”.
17. “உலகில் ஒழிய வேண்டும் ஆணவக் கொலைகள் ;
காதலித்ததற்காக கொல்வதை உடன் நிறுத்துங்கள்”. என்கிறார்.
18. “ஆதாம் ஏவாள் காலத்தில் தொடங்கிய காதல், அகிலம் உள்ளவரை தொடரும்”.
19. “நெற்பயிர் வளர மட்டுமல்ல, மழை. நல் காதல் வளரவும் உதவியது மழை” – குடைக்குள் காதல்.
20. “காதலித்தவர்கள் மட்டுமே உணரும் உணர்வு, காதல்”
21. “ஒரே மாதிரி உருவம் கொண்டவர்கள் எழு பேர். பொய் – அவள் போல் அவள் மட்டுமே”. பிரபல ஓவியர்கள் கூட அவள் போல் வரைய முடியவில்லை.
22. “காதல் தோல்வி என்னுள் கவிதை வளர்த்தது”.
23. “காதலி நினைவாக கவிதைகள் பெருகியது”.
24. “பேசாத மௌனம் மனதைக் கொன்றுவிடும்”.
25. “ஊடலை வெளிப்படுத்தும் ஆயுதம் மௌனம்,
கூடலுக்கு மௌனம் கலைப்பது அவசியம்”.
27. “ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல ; ஒன்று தான். காதல்”.
28. “வாசனை திரவியங்கள் தோற்றன, கூந்தல் வாசம்”.
29. “இரும்பை உடன் இழுத்திடும் காந்தம்,
என்னை இழுக்கிறாள் காந்தக் கண்ணழகி”.
30. “உன் மனம் நான் அறிவேன், கவிஞனுக்கு கற்பனையே அழகு” என்று கவி பாடுகிறார்.
31. “விழிகளில் மின்சாரம் உள்ளது,
கண்டுபிடியுங்கள், விஞ்ஞானிகளே”
32. “வழி மேல் மனதையும் வைத்துக் காத்திருக்கிறேன்.
33. “உதயசூரியனை உன்னால் பார்த்தேன்” கோலமிடும்போது.
34. “எனக்கு உயிர்த்து எழ வாய்ப்பே இல்லை”
உன்னுள் அடங்கி விட்டேன்.
35. “அவளுக்கு உவமை அவனியில் இல்லை”
36. “மண்ணில் உள்ள சொர்க்கம், மாறாத நிரந்தர மார்கழி”
37. “திருவிழாவில் உன்னைத் தரிசிக்க வந்தேன்”
38. “என்னவள் அழகி என்பதை விட,
அறிவாளி என்பதால் தான் எனக்குப் பிடித்தது”.
39. காதலர்கள் திரைப்படம் பார்க்கச் செல்வதில்லை ; விழிப்படம் (தங்களை பார்த்துக் கொள்ள்வே) காண செல்கின்றனர்.
40. காதலர்கள் பொறை ஏறும் விஷயத்தையும் கூறுகிறார்.
“அசை போடும் மாடு போல, தன் மூச்சிருக்கும் வரை நினைவுகளை அசை போடுகின்றனர், காதலர்கள்“.
41. “சுவாசமே நீ தான்” என்றிருக்கும் காதலர்களை
அங்கீகரிக்க - பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.
42. “காதல் திருமணத்தை அங்கீகரியுங்கள்,
கட்டாயம் வரதட்சிணை ஒழியும்” என்று கூறுகிறார்.
நூலின் இறுதியில், தன் விவரக் குறிப்பினையும், அவரது படைப்புக்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
--
.
கருத்துகள்
கருத்துரையிடுக