கவிஞர் சுரதா நினைவு நாள்
கவிஞர் சுரதா - தொகுப்புகள்
பாரதிக்கு தாசனாக பாரதி தானும் பாரதி தாசனுக்கு தாசனாக சுப்புரத்தின தாசனும்( சுரதா) கவிதை உலகில் இயங்கி வந்தனர். ஒருத்தருக்கு ஒருத்தர் தாசன் என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித் தன்மை உள்ளது. கவிஞர் சுரதா உவமைக் கவிஞர் என்று போற்றப்பட்டார். அவர் கவிதை உலகில் பல சோதனை முயற்சிகள் செய்தார். சாதனைகளும் பல செய்தார். அவரின் புத்தகங்கள் விவரம் என் சேகரிப்பில் உள்ளவை.
01. தொடாத வாலிபம் ( கவிதை, கட்டுரை, நாடகம்)
02. பூக்கூடை ( அணிந்துரைகள்)
03. வாழ்த்து மழை ( வாழ்த்துப் பாடல்கள்)
04. முத்துப் பந்தல் ( செய்திகள்)
05. அரங்கத்தில் அறி முகம் ( கவியரங்கத்தில் கவிஞர்கள் அறிமுகம்)
06. தேன் மழை ( கவிதைகள்)
07. எப்போதும் இருப்பவர்கள்( தலைவர்கள் பற்றியவை)
08. கவிதைகள் ( தேர்ந்தெடுக்கப் பட்டவை)
09. விரல் நுனி வைரங்கள்( கையெழுத்தில் கவிதைகள்)
10. பாரதி தாசன் பரம்பரை ( கவிதைகள்)
11. அமுதும் தேனும் ( கவிதைகள்). 12. முன்னும் பின்னும் ( திரைப்பாடல்கள் குறித்த தொகுப்பு).
13. துறை முகம் ( கவிதைகள்)
14. இதழ் மலர்கள் ( இதழில் வெளிவந்த கவிதைகள்)
15. மங்கையர்க்கரசி ( முதன் முதலாக வெளி வந்த திரைப்படக் கதை நூல்)
16. நெய்த செய்திகள் ( தொகுப்பு)
17. விதைகள் ( தேர்ந்தெடுக்கப் பட்ட கருத்துகள்)
18. வினாக்களும் விடைகளும் ( நேர்காணல்கள்)
19. உண்மையைச் சொல்லுகிறேன் ( நேர்காணல்கள்)
20. முன்னும் பின்னும் ( தொகுப்பு)
21. சுரதா கவிதைகள் - சுரதா
சுரதா பற்றிய தொகுப்பு
22.சுரதா ஓர் ஒப்பாய்வு - தி. முருகு சுந்தரம்
23.சுரதாவின் சொற்சுவை 100- தொகுப்பு நாமக்கல் நாதன்
24.கவிதைத் துறைமுகம் சுரதா - இ. சாகுல் அமீது
25. சுரதா என் ஆசான் - நாமக்கல் நாதன்
26 சுரதா - இந்திய இலக்கியச் சிற்பிகள் - இரா. குமரவேல்
27. வெட்ட வெளிச்சம் - கட்டுரைகள்
சுரதாவின் தொகுப்புகள் தேடத் தேட கிடைத்துக் கொண்டே இருக்கிறது. தேடுதல் தொடர்கிறது..
பொன். குமார்
9003344742
கருத்துகள்
கருத்துரையிடுக