உலக சுற்றுச்சுழல் நாள் . 5.6.2023 கவிஞர் இரா .இரவி !

உலக சுற்றுச்சுழல் நாள் . 5.6.2023 கவிஞர் இரா .இரவி ! சுத்தம் சுகம் தரும் உணர்ந்திடுவோம் ! சுகாதாரம் நலம் தரும் உணர்த்திடுவோம் ! கண்ட இடங்களில் குப்பைக் கொட்டாதிருப்போம் குப்பைத் தொட்டியில் மட்டும் கொட்டுவோம் ! அயல்நாடுகளில் பேணிடும் சுத்தத்தை நாம் ! நம் நாட்டிலும் பேணிட முன்வர வேண்டும் ! கண்ட இடங்களில் குப்பை போட்டால் ! தண்டத் தொகை வசூலிக்க வழி செய்வோம் ! ஒலி மாசும் தீங்குதான் அறிந்திடுவோம் ! ஒலியின் அளவை குறைத்து வைத்திடுவோம் ! காற்றை மாசு படுத்தும் புகை குறைத்திடுவோம் ! காற்றை சுத்தமாக வைத்திருக்க வகை செய்வோம் ! சீனா பட்டாசு மட்டுமல்ல சிவகாசி பட்டாசும் வேண்டாம் ! சீரான தென்றலை சிதைத்திடும் புகைமாசு வேண்டாம் ! மனிதர்களை மட்டுமல்ல பறவைகளையும் வரவேற்போம் ! மனிதநேயம் மட்டுமல்ல பறவை நேயமும் காப்போம் ! மரம் வளர்ப்பதைக் கடமையாகக் கொள்வோம் ! மழைநீர் சேகரிப்பைக் கட்டயமாக்கிடுவோம் ! நிலத்தை மலடாக்கும் செயற்கை உரங்கள் வேண்டாம் ! நிலத்தை செழிப்பாக்கும் இயற்கை உரங்கள் வேண்டும் ! காடுகளை அழிப்பதை உடன் நிறுத்த வேண்டும் ! காடுகளைக் காத்திட துணை நிற்க வேண்டும் ! நோய் பரப்பும் கிருமிகளை அழித்திடுவோம் ! நோயில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்திடுவோம் ! பாலீத்தின் பைகளுக்கு முடிவு கட்டுவோம் ! துணிப்பை கொண்டு செல்வதை வழக்கமாக்கிடுவோம் ! வெப்பமயமாதலை தடுத்திட திட்டம் வகுப்போம் ! உலகம்யமாதலை உடன் தடுத்து வைப்போம் ! வருங்கால சந்ததிகளுக்கு சொத்து வைக்காவிட்டாலும் ! வளம்மிக்க இயற்கை காடு பசுமை செழிப்பை விட்டு வைப்போம் ! .

கருத்துகள்