அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி

அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி ***** அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் அறம் திருக்குறள் அளவிற்கு வேறு எதிலும் இல்லை! பெற்ற தாய் பசியோடு வாடினாலும் என்றும் பெரியோர் பழிக்கும் செயல் செய்யாதே என்றது! பஞ்சமா பாதகம் செய்தேனும் தாய்பசி போக்கு என்றது பழங்கால வேதம் சொன்னதை ஏற்காதது திருக்குறள்! தீங்கு இழைத்த பகைவனும் வெட்கும்வண்ணம் நன்மை செய்திடச் சொன்ன உயர்ந்த திருக்குறள்! காந்தியடிகளின் அகிம்சைக்கு அறவாழ்வுக்கு அடித்தளம் கற்கண்டு திருக்குறளே அவரே வழிமொழிந்தார்! மாமனிதர் அப்துல்கலாமின் மகத்தான வாழ்விற்கு மண்ணில் அடிப்படையாக இருந்ததும் திருக்குறளே! பிறப்பொக்கும் எல்லா உயிரும் சமமென்ற திருக்குறள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற திருக்குறள்! பிறர்செய்த உதவியை மறக்காதே என்ற திருக்குறள் பிறருக்கு செய்த உதவியை மறந்திடு என்ற திருக்குறள்! ஏதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டிட்ட திருக்குறள் எதையும் ஆராய்ந்து ஏற்கச் சொன்ன திருக்குறள்! யார் சொல்வது என்பது முக்கியமன்று என்ற திருக்குறள் யார் சொன்னாலும் ஆராய்ந்து அறிந்திடு என்ற திருக்குறள் வன்சொல் என்றும் பேசாதே என்ற திருக்குறள் இன்சொல்லே என்றும் பேசிடு என்ற திருக்குறள் திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும் திருக்குறள் வழி நடந்தால் உலகம் உய்க்கும்!

கருத்துகள்