ிலம்பில் மூவேந்தர் பெருமை! கவிஞர் இரா. இரவி

சிலம்பில் மூவேந்தர் பெருமை! கவிஞர் இரா. இரவி ***** சிலம்பில் மூவேந்தர் பெருமை இருந்ததால் தான் சிலம்பை மூவேந்தர் காப்பியம் என்றனர் சேர, சோழ, பாண்டியரின் புகழை உரைத்தது சீரும் சிறப்புமாக நாட்டை ஆண்டதைப் பாடியது குடிமக்கள் காப்பியம் என்றும் அழைத்தனர் குடிமக்களான கோவலன் கண்ணகி பாடியது பாண்டிய மன்னனை எதிர்த்துப் பேசினாள் கண்ணகி பாவம் கோவலன் கொன்றது குற்றம் என்றாள் நீதி கேட்டு நெடும் பயணம் வந்து அடைந்தாள் நீதியை நிலைநாட்டினாள் பாண்டிய மன்னனுக்கு என் கணவன் கோவலன் கள்வன் அல்ல என் கணவனைத் தண்டித்த மன்னரே குற்றவாளி நானே கள்வன் எனச் சொல்லி மாண்டான் நல்ல மனைவியும் உடன் கீழே சாய்ந்தாள் பாண்டிய மன்னன் உயர்ந்து நிற்கிறான் பரிசாக தன்னுயிரைத் தந்து வீழ்ந்தான் இப்படி ஒரு மன்னரைக் காண முடியுமா? இன்றும் என்றும் நிலைத்தது பாண்டியன் புகழ் மன்னன் இறந்ததோடு விடவில்லை கண்ணகி மதுரையையும் விதிவிலக்குடன் தீயுக்கு இரையாக்கினாள் கண்ணகி கோட்டம் வரை சென்று நின்றாள் கதை கேட்டோரை கண்கலங்கிட வைத்தாள் சிலப்பதிகாரம் என்று பொருத்தமாக பெயரிட்டார் சிலம்பால் பாண்டியன் அதிகாரமிழந்து இறந்தார்.

கருத்துகள்