வெற்றி ! கவிஞர் இரா .இரவி !

வெற்றி ! கவிஞர் இரா .இரவி ! வெற்றி பெற வேண்டும் என்று வேண்டும் வெறி ! வெற்றி எளிதில் கிடைத்து விடாது என்பதை அறி ! வெற்றி எட்டும் கனி என்றே நீ நினைத்திடு ! வெற்றி எட்டாக்கனி என்று நீ நினைக்காதே ! விவேகமாகச் சிந்தித்து வேகமாகச் செயல்படு ! வேறு சிந்தனை விடுத்து ஒரே சிந்தனை செய்திடு ! தோல்வி நேருமோ ? பயத்தை விட்டுவிடு ! தோல்வியைத் துரத்துவேன் துணிவுடன் முடிவெடு ! பயிற்சி முயற்சி தளர்ச்சியின்றித் தொடர்ந்திடு ! அயற்சி இன்றி ஆர்வத்துடன் நடந்திடு ! என்றும் இஸ்டப்பட்டு செயலில் இறங்கு ! என்றும் கஷ்டப்பட்டு செயலில் இறங்காதே ! எனக்கு வரும் என்றே நீ நினைத்திடு ! எனக்கு வராது என்று நீ நினைக்காதே ! என்னால் முடியும் என்றே நீ நினைத்திடு ! என்னால் முடியாது என்று நீ நினைக்காதே ! முடியாது என்று எடிசன் நினைத்து இருந்தால் ! முற்றிலும் இருட்டாகவே இருந்திருக்கும் உலகம் ! முடியாது என்று காந்தியடிகள் நினைத்து இருந்தால் ! முழுசுதந்திரம் இன்றி அடிமையாகவே இருந்திருக்கும்! முடியாது என்று பெரியார் நினைத்து இருந்தால் ! மூட நம்பிக்கையில் நாடு மூழ்கியே இருந்திருக்கும்! முடியாது என்று ஆம்ஷ்டிராங் நினைத்து இருந்தால் ! முழு நிலவு மனிதன் கால் படாமலே இருந்திருக்கும்! முடியும் என்று முயன்றதால்தான் எல்லோருக்கும் முடிந்தது சாதனைகள் எளிதாக சாத்தியமானது ! முடியும் என்று நீயும் உடன் முயன்றால்தான் ! முடியும் உன்னால் உலகில் சாதிக்க முடியும் ! தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறி ! தன்னிகரில்லாதவன் நீ என்பதை அறி! தன்னம்பிக்கை மலையளவு இருக்கட்டும் ! நன் நம்பிக்கை கடலளவு இருக்கட்டும் ! இறுதி செய்யப்பட்ட வெற்றி உனக்கு உறுதி ! பரிதியாகப் பயணம் தொடரு சிகரம் உனது !

கருத்துகள்