பா.பு.சரவண பாண்டியன், எட்டாம் வகுப்பு, நாகை.

பா.பு.சரவண பாண்டியன், எட்டாம் வகுப்பு, நாகை. #Reading_marathon2023 20/50 TD078 #30daycompetition2023 3024/3500 புத்தகப் பெயர்:மண்ணும் மக்களும் எழுத்தாளர்:இறையன்பு அவர்கள் பதிப்பகம்:கற்பகம் புத்தகாலயம் பக்கங்கள்:272 விலை:₹230/- முதல் பதிப்பு:அக்டோபர் 2020 அச்சு:நொவினா ஆப்செட் வகை:கட்டுரை இந்த புத்தகத்தில் எழுத்தாளர் தன் சிறுவயதில் இருந்து பார்த்த மனிதர்களை பற்றி சொல்கிறார். அவர் முதலில் தன் வீட்டை பற்றி சொல்கிறார்.இப்போது உள்ள வீடுகள் நெருக்கமாக கட்டப்பட்டு மரங்கள் வளர்க்க இயலாமல் இருக்கிறது.ஆனால் அப்போது வீடுகள் சற்று இடம் விட்டு இருந்ததால் மரங்கள் வளர்க்க முடிந்தது. அப்படிப்பட்ட ஒரு வீட்டில் தான் எழுத்தாளர் தனது குடும்பத்துடன் சின்ன வயதில் வாழ்ந்திருக்கிறார். அதன்பிறகு அவர் சொல்லும் முதல் நபர் காவல்கார தாத்தா.இப்போதுள்ள காலகட்டத்தில் வீடு கட்டும் போது பொருட்களை பக்கத்தில் உள்ளவர்களிடம் பாதுகாக்க கொடுத்தால் அடுத்த நாள் வந்து பார்த்தால் பாதி பொருட்களை இருக்காது.ஆனால் அப்போது மனிதர்களிடயே நம்பிக்கை இருந்தது.அப்படி தான் அருகிலிருந்த வீட்டை கட்டும்போது அதை பாதுகாக்க காவல்கார தாத்தா வந்தார்.அவர் அந்த இடத்தை நன்றாக பார்த்து கொண்டார்.எழுத்தாளரிடம் அவரின் சகோதர சகோதரிகளிடம் அன்பாக நடந்து கொள்கிறார். அடுத்த நபர் பெருமாள்.அவர் எழுத்தாளர் இருந்த வீட்டுக்கு நான்கைந்து வீடுகள் தாண்டி வாழ்ந்தார் அவருக்கு நான்கு தம்பிகள்,ஒரு தங்கை.அவர் குதிரை வண்டி ஓட்டினார்.அப்போது மக்களின் அன்பை மட்டுமே பார்த்தனர்.அவர்கள் பார்க்கும் தொழிலை பார்க்வில்லை.அதனால் தான் அப்போது மக்கள் நெருக்கமாக இருந்தனர்.அப்படி தான் ஐந்து சகோதரர்களிடமும் சகோதரியிடமும் அன்பாக நடந்து கொள்கிறார்கள். பிறகு எழுத்தாளர் அறிமுகப்படுத்தும் மற்றொரு நபர் லிபர்டி காசிநாதன்.இவர் சேலம் சூரமங்கத்தில் லிபர்டி என ஒரு துணி சலவையகம் இருந்தது.அந்த கடையை பார்த்து கொண்டவர் தான் காசிநாதன்.அவருக்கு எழுத்தாளரின அப்பாவை நன்றாக தெரியும்.அதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி கொண்டனர். ஒருமுறை எழுத்தாளரின் வீட்டுக்கு வெள்ளையடிக்க ஆட்கள் வேண்டும் என்கிற போது காசிநாதன் தன் மகன் நாராயணனை வெள்ளையடிக்க அனுப்பினார்.நாராயணன் வெள்ளையடித்து கிளம்பும் போது எழுத்தாளரின் அப்பா அவருக்கு பணம் கொடுத்து அனுப்புகிறார்.ஆனால் அவர் போன வேகத்தில் காசிநாதனிடம் அடி வாங்கி கொண்டு பணத்தை கொடுத்து விட்டு சென்றார்.இப்படி காசிநாதன் உதவி செய்வதற்காக தன் மகன் என்று பார்க்காமல் வெள்ளையடிக்க அனுப்பினார். அடுத்த நபர் சிங்காரவேலு மாஸ்டர்.எழுத்தாளர் வீட்டில் இருந்து சற்று தள்ளி தான் அவரது வீடு அமைந்து இருந்தது.அவர் உடற்கல்வி ஆசிரியர்க எழுத்தாளர் படித்து கொண்டிருந்த பள்ளியில் வேலை பார்த்தார்.அவரை அனைத்து மாணவர்களுக்கு பிடிக்கும்.அவர் அந்த பள்ளியில் வாலிபால் சொல்லி கொடுப்பார்.அது மட்டுமில்லாமல் அவருக்கு இலக்கியத்தின் மீது அதிக ஈடுபாடு உண்டு.அதன் பிறகு அவர் தலையில் புற்று நோய் வந்ததால் இறந்து விட்டார் என்று சோகமாக சொல்கிறார் எழுத்தாளர். அது மட்டுமல்லாமல் அவர் பர்மா ஸ்டோர் பாய்,மணிகண்ட விலாஸ் மனோகர்,சாமிநாதன் வாத்தியார்,முபாரக் முகமது அலி, டாக்டர் மாமா,வீரபாண்டி மாமா,ராணி அக்கா என பல பேரை பற்றி எழுத்தாளர் சொல்கிறார்.இதில் எனக்கு மனோகர் சிங்கும்,டிரைவர் பிரான்சிஸும் பிடித்தவர்கள். இந்த புத்தகம் படிக்க நன்றாக இருக்கிறது.இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் இறையன்பு அவர்களுக்கும்,பதிப்பித்த கற்பகம் புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள் #சரவணபாண்டியன்

கருத்துகள்