படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. மதுரையைச் சேர்ந்த 58 வயதான டெய்லர் நாகேஷ்... 17 கிலோ எடையுள்ள கையால் இயக்கும் தையல் இயந்திரத்தை தோளில் சுமந்தவாறு தினசரி குறைந்தபட்சம் 15 கிலோமீட்டர் நடக்கிறார்..... தெருத்தெருவாக சென்று பழைய துணிகளை தைத்து தருவது இவரது தொழில்.... ஒரு நாள் அதிகபட்சம் 200 ரூபாய் கிடைப்பதே அரிது..... இந்த நிலையில்தான் அவர் குடும்பத்தை நடத்தி வருகிறார்..... ஆனால் அவரது பேச்சில் என்றேனும் ஒரு நாள் தன் வாழ்வில் வசந்தம் வீசும்..... வாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கை துளிர்ப்பது போல் பேசுகிறார்.... ஆனந்த விகடன் இணையதளத்தில் இவரைப் பற்றி செய்தி போட்டிருக்கிறார்கள்.... இறுதியில் ஒரு வரி குறிப்பிட்டிருந்தார்கள்.... இவர் கிழிந்து போன துணிகளை மட்டும் தைக்கவில்லை.... நைந்துபோன வாழ்க்கையின் நம்பிக்கைகளையும் சேர்த்தே தைக்கிறார்.... என்று!!! *• THE SEITHIKATHIR | TELEGRAM |* *• JOIN US:* https://t.me/Seithikathir

கருத்துகள்