*அம்பேத்கர் எனும் ஆளுமை*

*அம்பேத்கர் எனும் ஆளுமை* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🌹 *முன்னுரை 😘 ஆளுமை என்பதற்கு பல அர்த்தங்கள் இருந்தாலும் நடைமுறையில் ஆளுமை என்பது ஒருவரின் துணிச்சலான மற்றும் தைரியமான பண்பையும், மிடுக்கான கம்பீரமான வெளித்தோற்றத்தையும், ஒரு இயக்கத்தின் நிர்வாகத்தன்மையும், ஒரு கூட்டத்தை அல்லது ஒரு நிர்வாகத்தை வழிநடத்தும் பண்பையும் வெற்றிகரமான வாழ்க்கையையும் இப்படி மொத்தமான குணநலங்களையும் ஒன்று சேர்ந்து குறிப்பதே ஆளுமை எனப்படுகிறது. வரலாற்றை நாம் தோண்டிப் பார்த்தோம் என்றால் ஆளுமை மிக்க மனிதர்களே வாழ்வில் சாதனையாளராகவும், வெற்றியாளர்களாகவும், தடைகளை உடைத்தவர்களாகவும், சவால்களை சந்தித்தவர்களாகவும், சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர்களாகவும் திகழ்கிறார்கள்.. மேலும் ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லானது ஆங்கிலத்தில் "பர்சனாலிட்டி" (Personality) என்று அழைக்கப்படுகிறது, இச்சொல்லானது எப்படி வந்தது என்று பார்த்தால் இலத்தீன் மொழியில் "பர்சனா" (persona) என்றால் 'மறைப்பு', 'முகமூடி' என்னும் பொருளை குறிக்கிறது. எனவே ஆளுமை என்பது "ஒருவர் அணிந்திருக்கும் முகமூடி" என்னும் கருத்தை அடிப்படையைக் கொண்டது ஆகும். அந்த வகையில் அம்பேத்கார் என்கின்ற ஆளுமை என்கின்ற தலைப்பில் சட்ட மேதை அவர்களின் வாழ்க்கை அவர் கடந்து வந்த பாதை பற்றிய கட்டுரை பின்வருமாறு... 🌹 *பொருளுரை 😘 அம்பேத்கர் எனும் ஆளுமை என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினால் முடிவில்லாமல் எழுதிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு அம்பேத்கர் அவர்களின் சாதனைகள் அளப்பரிய சாதனைகள் ஆகும். அம்பேத்கர் அவர்களின் உழைப்பானது வற்றாத ஜீவநதியாகவும் அம்பேத்கர் அவர்களின் சமத்துவ கண்ணோட்டமானது மகா சமுத்திரம் போன்றது.. அம்பேத்கர் அவர்களின் பொதுநலப் பார்வையும் தொலைநோக்குப் பார்வை சமத்துவ சமநோக்கு சிந்தனை சாகா வரம் பெற்றது... பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி உரிமைக் குரல் கொடுத்த உன்னத தலைவர் ஆவார்... மேலும் பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'நவ புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஏப்ரல் 14 ம் தேதி 1891 ஆம் ஆண்டு அம்பேத்கார் நகரில் பிறந்து டிசம்பர் 06 ம் தேதி 1956 ஆம் ஆண்டு புது தில்லியில் இறைவனடி சேர்ந்து இறவாத புகழை அடைந்தார். "இந்திய தேசத்தின் இயற்கையான அம்சங்களையும், மனித சமூகத்தையும் ஒரு பார்வையாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அநீதிகளின் புகலிடமாக இந்த நாடு இருக்கிறது என்றும், அது சந்தேகத்துக்கு இடமில்லாத பார்வையாகவும் தோன்றும்'' என்பதுதான் அம்பேத்கரின் முதல் இதழியல் கட்டுரையின் தொடக்கமாக இருந்தது. "மூக்நாயக்'' (குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர்) பத்திரிகையின் முதலாவது பதிப்புக்காக 1920 ஜனவரி 31ஆம் தேதி அவர் இந்தக் கட்டுரையை எழுதினார். அதன்பிறகு நிறைய மாறிவிட்டது என்றாலும், அதிகமாக மாறிவிடவில்லை என்பதுதான் இன்றளவும் நடைமுறையில் இருக்கும் உண்மையாகும்... இச்சமுகத்திற்கு எதிராக தனது கருத்துக்களை ஆணித்தனமாகவும் அழுத்தமாகவும் கூறி வந்தார் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அவர் சந்தித்த வலிகளை வரிகளாக மாற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலுக்காக ஓடி ஓடி உழைத்தார்.. அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியில் தாழ்மையான நிலையில் இருந்த மக்களை அறிவேனும் ஆயுதத்தை கொண்டு அறவழியில் உயர்த்தி காட்டினார் . தனியொரு மனிதனாக வெளியில் இருந்து வேறு நபர்களின் பெரிய ஆதரவு எதுவும் இல்லாமல், மேலிருந்து கீழ்நிலை வரை அனைத்தையுமே அம்பேத்கர் தன் தோள்களில் தனி மனிதனாக சுமந்தார் இச் சமூகத்தின் அவல நிலைகளுக்கு எதிராகவும் அநீதிகளுக்கு எதிராகவும் போராடினார், எதிரிகளின் இன்னல்களையும் இன்முகமாக ஏற்றார் தனது இடைவிடாத முயற்சியால் போராட்டத்தால் போர் குணத்தால் தனது வெற்றி கொடியை இமயத்தில் பறக்க விட்டார் அடித்தட்டு மக்களின் இதயங்களில் நாயகனாக அன்று முதல் இன்று வரை நங்கூரம் பாச்சிய கப்பல் போல திகழ்கிறார். 🌹 *தீண்டாமை ஒழிப்பும் அம்பேத்கர் அவர்களின் முயற்சியும்* தீண்டாமைக்குக் காரணமான சாதியையும், இந்து மதத்தையும் அடியோடு அழிப்பதன் மூலம் மட்டுமே இங்கு பஞ்சமர்களும் அவர்களை ஒடுக்கும் சூத்திரர்களுக்கும் உண்மையான 'சுயமரியாதை' கிடைக்கும் என்று முழங்கியவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார்.. பாபாசாகேப் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும், சூத்திரர்களுக்காகவும், பஞ்சமர்களுக்காவும், பெண்களுக்காகாவும், தொழிலாளர்களுக்காகவும், கருத்தியல் ரீதியாகவும், சட்டத்தின் மூலமாகவும் போராடிய அசாதாரணமான தலைவர் ஆவார். சௌதார் குளத்தை மகார் சமூகத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தியதால், அக்குளத்தை புனிதப்படுத்த வேண்டும் என சாதி இந்துக்கள் பிரச்சாரம் செய்தனர். இதற்கிடையே 1927 ஆகஸ்டு 04 ம் நாள் சௌதார் குளத்தை தீண்டப்படாத மக்கள் பயன்படுத்தலாம் என்று நிறைவேற்றிய தீர்மானத்தை மகத் நகராட்சி இரத்து செய்தது. அதனைக் கண்டித்து, 1927, டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சத்தியாக்கிரகம் செய்வது என பாபாசாகேப் முடிவெடுத்தார். "போராட்டம் வன்முறையானதாக இருப்பினும், அகிம்சை வழியினதாயினும் அதன் குறிக்கோள் விழிமியதாயிருப்பின் அது நேர்மையானதே" என அம்பேத்கர் கருதினார். மராட்டியத்தின் பார்ப்பனர் அல்லாதார் தலைவர்களான ஜவல்கர், ஜெதே ஆகியோர் சத்தியாகிரகத் திட்டத்திற்கு முழு ஆதரவை அளித்தனர். அதில் இறுதியாக வெற்றி கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சாதி ஒழிப்பு (Annihilation of Caste) இந்தியாவில் தீண்டாமை மற்றும் சாதி அமைப்புகளை ஒழிப்பதற்காக வேண்டி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய கட்டுரையைத் தொகுத்து 1936 ஆம் ஆண்டு Annihilation of Caste என்கின்ற நூலை அம்பேத்கர் வெளியிட்டார். தீண்டாமை ஒழிப்பிற்காக அம்பேத்கர் அவர்கள் தொடர்ச்சியாக போராடியதன் விரைவாக இன்னும் பல்வேறு சட்டத்திருத்தங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. இருப்பினும் முதன் முதலாக, தீண்டாமை (குற்றங்கள்) சட்டம் 1955ல் கொண்டு வரப்பட்டது. அதன்பின் 1965, ஏப்ரல் 27-ல் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.எஸ்.இளையபெருமாள் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் பின்னர் 1976 - ல் குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ( Protection of civil rights act ) கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் 1989ல் 'பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமைத் தடைச் சட்டம் 1989' நடைமுறைக்கு வந்தது. மொத்தம் 23 பிரிவுகளைக் கொண்ட இச்சட்டம், பிற சட்டங்களைவிட மேலோங்கி நிற்கும் வகையில் பல சிறப்புத் தன்மைகளைக் கொண்டதாக விளங்கியது. பல்வேறு வகை வன்கொடுமைக் குற்றச் செயல்களையும், அதற்கான தண்டனைகளையும் இச்சட்டம் கூறுகிறது. இத்தண்டனை ஆறு மாதத்திற்குக் குறையாததாய் ஐந்தாண்டுகள் வரை நீடிக்கும் அளவிற்கு, சிறைத்தண்டனையும் மற்றும் அபாரத்தையும் விதிக்க வகை செய்கிறது. 1995 களுக்குப் பிறகு, இச்சட்டங்களுக்கு விதிகள் அமைக்கப்பட்டு சரியான முறையில் நடைமுறைக்கு வந்தன. அண்மையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கை வாசலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து தனது காட்டுமிராண்டித்தனத்தை ஜாதி வெறியர்கள் வெளிப்படுத்தினார்கள் இன்னும் இந்த அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வேலையிலும் பல போலித் தலைவர்கள் மற்றும் பல சாதிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து கொண்டு இருக்கின்றன என்பதோடு மட்டுமல்லாமல் இச்சட்டத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்ற‌ன. அப்படியென்றால், இப்போதுதான் இச்சட்டங்கள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்கிற உண்மை புலனாகிறது. சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களை வழிநடத்தாமல் சட்டத்தை நீக்க வேண்டும் என்று மக்களை திசை திருப்பி அவரவர் சுய லாபத்திற்காக அரசியல் ஆதாயத்திற்காக ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள் போலி தலைவர்கள் என்பதை அறிவார்ந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தீண்டாமை ஒழிப்பிற்காக தன் வாழ்நாளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகவும், இறந்த பின்பு சட்ட நூல்களின் மூலமும், தனது கொள்கைகளின் மூலமும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர். 🌹 *முடிவுரை 😘 வெறும் உடை அலங்காரம் ஆளுமை என்பதில்லை .. உடல் ,மனம் ,வெளிக்காட்டும் தன்மை என்று எல்லாம் ஒரு சேர ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் உங்களுக்கு தெரிந்த சிறந்த ஆளுமைமிக்க மனிதர் யார் என்று வினவுகிறார்?? எல்லாரும் விவேகானந்தர். அப்துல்கலாம் என்று சொல்கிறார்கள் ஒரு மாணவன் மட்டும் எங்க ஊர் டீக்கடை அண்ணாச்சி என்று சொல்கிறார் ஏன் என்று மாணவரிடம் அந்த ஆசிரியர் கேட்க? அந்த அண்ணாச்சி நல்ல சிரிச்சி பேசி எல்லோரிடமும் அன்பா பழகுவார் மற்ற கடைகளை காட்டிலும் அங்கு கூட்டம் எந்நேரமும் அலைமோதும் எல்லாருக்கும் யார் யாரயோ ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களின் குணம் பிடித்து போகிறது அதாவது நம்மை அறியாமலயே நம்மை அவர்கள் ஆள்கிறார்கள் இது தான் ஆளுமை அந்த வகையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புன்னகை தழுவிய முகமும், சமத்துவ சித்தாந்தத்தை கொண்ட அகமும், இதமான பேச்சும், துணிச்சலான செயலும், சமத்துவ கண்ணோட்டத்தில் எடுக்கும் தெளிவான முடிவும் ஆளுமை மிகுந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் குணநலன்கள் ஆகும்.. *வாழ்க அண்ணல் அம்பேத்கர்* *அவர்களின் புகழ்* 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 🔥 *ஜெய் பீம்.!!!* 🔥 ✍️ 💙 சமூகக்காதலன் 💙 *சமூகப்பற்றாளன் ஞானசித்தன்* 7598534851 வெள்ளக்கல்பட்டி, நாமகிரிப்பேட்டை, நாமக்கல் மாவட்டம்.. 📖📚📖📚📖📚📖📚 R Ravi Ravi 3ம.நே · பொது உடன் பகிர்ந்தது

கருத்துகள்

  1. தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் அரவணைப்பிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா

    பதிலளிநீக்கு
  2. 💙💙💙💙💙💙👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐💐💐💐

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக