ிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி

சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி மண்ணிற்கு வந்த வைரங்கள் மகத்தான சிறப்பு குழந்தைகள்! பூமிக்கு வந்த புதினங்கள் புரிந்து கொண்டால் இனிமைகள்! ஆரம்பத்தில் கவனிக்காமல் இருப்பார்கள் அன்பினால் கவனிக்க வைக்கலாம்! புரியாமலே சேட்டைகள் செய்வார்கள் புரிய வைத்தால் புரிந்து கொள்வார்கள்! களிமண்ணாக இருக்கும் அவர்களை கலைநயமிக்க சிலையாக்குவது நம் வசமே அன்பால் போதனை செய்தால் அற்புதமாக மாறுவார்கள் அவர்கள்! முறையான பயிற்சிகள் வழங்கினால் முறைப்படி நல்வாழ்வு வாழ்வார்கள்! ஆதிக்கம் செலுத்துதல் முறையன்று அடித்துச் சொல்லுதல் வழியன்று! வருங்கால் எடிசன்கள் அவர்கள் வளமான நல்வழியை காட்டுங்கள்! வருங்கால அப்துல்கலாம் அவர்கள் வசைமொழி என்றும் கூறாதீர்கள்! கண்ணின் இமைபோல காத்திடுங்கள் கண்ணியமிக்கவர்களாக மாறுவார்கள்

கருத்துகள்