பண்டைத்தமிழை பண்ணித்தமிழ் ஆக்காதீர்

பண்டைத்தமிழை பண்ணித்தமிழ் ஆக்காதீர் =========== Cook பண்ணு - சமை Eat பண்ணு - உண் Drink பண்ணு - குடி Walk பண்ணு - நட Run பண்ணு - ஓடு Dance பண்ணு - ஆடு Buy பண்ணு - வாங்கு Sell பண்ணு - வில் Win பண்ணு - வெல் Tie பண்ணு - கட்டு Throw பண்ணு - எறி Pick பண்ணு - எடு Roll பண்ணு - உருட்டு Show பண்ணு - காட்டு Cry பண்ணு - அழு Fry பண்ணு - வறு Refuse பண்ணு - மறு Accept் பண்ணு - ஏல் Hide பண்ணு - ஒளி Seek பண்ணு - தேடு, கண்டுபிடி Search பண்ணு - தேடு Warn பண்ணு - எச்சரி Break பண்ணு - உடை Guide பண்ணு - (வழி)காட்டு Write பண்ணு - எழுது Read பண்ணு - படி Listen பண்ணு- கேள் Question பண்ணு - வினவு Pull பண்ணு - இழு Push பண்ணு - தள்ளு Own பண்ணு - சொந்தமாக்கு Kneel பண்ணு - மண்டியிடு Talk பண்ணு - பேசு Fight பண்ணு - சண்டையிடு, பொருது Swim பண்ணு - நீந்து Dive பண்ணு - குதி Jump பண்ணு - குதி Climb பண்ணு - ஏறு Respect பண்ணு - மதி Crush பண்ணு - நொறுக்கு Kick பண்ணு - உதை Touch பண்ணு - தொடு Feel பண்ணு - உணர் Laugh பண்ணு - சிரி Plow - உழு Bend பண்ணு - வளை Drive பண்ணு - ஓட்டு Open பண்ணு - திற Close பண்ணு - மூடு Kill பண்ணு - கொல் Save பண்ணு - கா(ப்பாத்து). சேமி Try பண்ணு - முயல்(தல்) Forgive பண்ணு - மன்னி Mistake பண்ணு - தவறு(தல்) Register பண்ணு - பதி Post பண்ணு - இடு Update பண்ணு - புதுப்பி Call பண்ணு - அழை Answer பண்ணு - விடையளி Stop பண்ணு - தடு, அணை, நிறுத்து, முடி Arrest பண்ணு - சிறையிடு Release பண்ணு - விடுவி Cut பண்ணு - வெட்டு Stick பண்ணு - ஒட்டு Hit பண்ணு - முட்டு, அடி Sing பண்ணு - பாடு Yell பண்ணு - கத்து Wound பண்ணு - நோகடி, காயப்படுத்து Join பண்ணு - சேர் Enjoy பண்ணு - மகிழ், கொண்டாடு Hurt பண்ணு - நோகடி, துன்புறுத்து Draw பண்ணு - வரை Erase பண்ணு - அழி Paint பண்ணு - (ஓவியம்) தீட்டு Rub பண்ணு - தடவு Treat பண்ணு - மருத்துவம் பார், குணப்படுத்து, நோய்தீர் Feed பண்ணு - ஊட்டு Publish பண்ணு - பதிப்பி, வெளியிடு Move பண்ணு - நகர், அசை Hang பண்ணு - மாட்டு, தொங்கவிடு Remove பண்ணு - அகற்று, கழற்று Switch பண்ணு - மாற்று Marriage பண்ணு - மணமுடி Divorce பண்ணு - மணமுறி Pluck பண்ணு - பறி Pinch பண்ணு - கிள்ளு Hug பண்ணு - அணை, கட்டிப்பிடி Kiss பண்ணு - முத்தமிடு Call பண்ணு - அழை, கூப்பிடு Refresh பண்ணு - புதுப்பி Roll பண்ணு - உருட்டு Forward பண்ணு - முற்செலுத்து Subscribe பண்ணு - ஒப்பமிடு Describe பண்ணு - விளக்கு Quote பண்ணு - மேற்கோளிடு Note ண்ணு - குறிப்பெடு Share பண்ணு - பகிர் Argue பண்ணு - மன்றாடு, வாதிடு Shut up பண்ணு - மூடு, பொத்து, அடக்கு Boil பண்ணு - கொதி வை Saute பண்ணு - வதக்கு Mix பண்ணு - கலக்கு Serve பண்ணு - பரிமாறு Grind பண்ணு - அரை Crush பண்ணு - நசுக்கு, தூளாக்கு, பொடியாக்கு Strain பண்ணு - வடிகட்டு Heat பண்ணு - சூடாக்கு Dry பண்ணு - உலர்த்து cut பண்ணு - நறுக்கு Heat பண்ணு - சூடாக்கு oil add பண்ணு - எண்ணெய் சேர் peel பண்ணு - உரி think பண்ணு - எண்ணு, சிந்தி use பண்ணு - புழங்கு, பயன்படுத்து avoid பண்ணு - தவிர் change பண்ணு - மாற்று compile பண்ணு - தொகு list பண்ணு - பட்டியலிடு follow பண்ணு - பின்பற்று adjust பண்ணு - இணக்கு, பொருத்து, சரிப்படுத்து, ஒழுங்காக்கு type பண்ணு - தட்டச்சிடு, தட்டிடு pour பண்ணு - ஊற்று tight பண்ணு - இறுக்கு loose பண்ணு - இளக்கு choose பண்ணு - தேர்ந்தெடு reject பண்ணு - புறக்கணி bite பண்ணு - கடி swallow பண்ணு - விழுங்கு spit பண்ணு - துப்பு chew பண்ணு - மெல், மென்று தின்னு off பண்ணு - அணை, நிறுத்து, மூடு on பண்ணு - போடு, தொடக்கு, திற skip பண்ணு - தவிர், விடு destroy பண்ணு - அழி build பண்ணு - கட்டு construct பண்ணு - கட்டு waste பண்ணு - வீணாக்கு use பண்ணு - பயன்படுத்து (electric) charge பண்ணு - (மின்)சாறு ஏற்று enable பண்ணு - இயலச்செய் recharge பண்ணு - மீள்சாறு ஏற்று update பண்ணு - புதுப்பி attack பண்ணு - தாக்கு defend பண்ணு - தடுத்தெதிர் confuse பண்ணு - குழப்பு violate பண்ணு - அத்துமீறு control பண்ணு - அடக்கு, கட்டுப்படுத்து sweep பண்ணு - பெருக்கு, கூட்டு scan பண்ணு - அலகிடு copy பண்ணு - படியெடு print பண்ணு - அச்சிடு bind பண்ணு - கட்டு spit பண்ணு - (எச்சில்) துப்பு drive பண்ணு - ஓட்டு ride பண்ணு - ஏறிச்செல் kick பண்ணு - உதை call பண்ணு - அழை answer பண்ணு - விடை கொடு, அழைப்பை எடு record பண்ணு - பதிவெடு beat பண்ணு - அடி annihilate பண்ணு - ஒழித்துக்கட்டு, அழித்தொழி, நிர்மூலமாக்கு ship பண்ணு - சரக்கனுப்பு pack பண்ணு - பொட்டலம் கட்டு carry பண்ணு - எடுத்துச்செல் ம்ம்ம். பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பேச்சுத்தமிழில் ஆங்கிலத்தின் தாக்கம் மிகுதியாக இருப்பது இந்தப் பட்டியலிலேயே தெரிகிறதல்லவா! #paNNiTamil

கருத்துகள்