"மூலதனம்"நூல் எழுத, கார்ல் மார்க்ஸ் எத்தனை ஆண்டுகள், எத்தனைபுத்தகங்களை வாசித்தார்

"மூலதனம்"நூல் எழுத, கார்ல் மார்க்ஸ் எத்தனை ஆண்டுகள், எத்தனைபுத்தகங்களை வாசித்தார்? **************************************** "படிப்பாளிகளும் படைப்பாளர்களும் இவ்வுலகை அழகு படுத்தியவர்கள். தேவையில்லாத பகுதிகளை நீக்கி தேவையானவற்றை சேர்த்தும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பே இவ்வுலகத்தை மேன்மை மிக்கதாக மாற்றியது. மதிப்பெண்களுக்காக படிக்காமல் அறிவை விருத்தி செய்யவும், உலகம் நம்பிக் கொண்டிருப்பது எல்லாம் உண்மை அல்ல என்று பிரபஞ்சத்தை ஆராய்வதற்கும், புராதான கதைகளை நம்பி அறிவியல் பார்வையை இழந்துவிடக் கூடாது என்று உரைப்பதற்கும் அவர்கள் படிக்கத் தொடங்கினார்கள். கடிகாரத்தின் பக்கம் கவனத்தை திருப்பாமல், வாசிக்கிற புத்தகத்திலேயே அத்தனை கவனத்தையும் குவித்து அவர்கள் படித்தார்கள். எழுதினார்கள். அதன் பயனாக பிரம்மாண்டமான இலக்கியங்கள் கிடைத்தன. இயற்கையை பற்றிய விளக்கங்கள் விளைந்தன. இலக்கணங்கள் கிடைத்தன. தத்துவங்கள் பிறந்தன. புதிய நாடுகள் புலப்பட்டன. அடுத்த உலகங்கள் அகப்பட்டன. வறுமையில் வாடிய போதும் படிப்பையும் எழுத்தையும் கைவிடாமல் பணியாற்றியவர் காரல்மார்க்ஸ். அவர் லண்டன் நூலகத்தில் அமர்ந்து வாசித்துக் கொண்டு இருப்பார். உணவை மறந்து தன்னை மறந்து வாசிக்கும்போது மயங்கி விழுவார்! அவரைக் கொண்டு வந்து வெளியே படுக்க வைப்பார்கள். தண்ணீரை தெளிப்பார்கள். நினைவு வந்ததும் மறுபடியும் உள்ளே சென்று படிக்க ஆரம்பித்து விடுவார்! அவரது அயராத உழைப்பின் பலன்களே உலகை மாற்றும் நூல்களாக உருவாயின. நாற்பத்தி மூன்று ஆயிரம்(43,000) புத்தகங்களை கரைத்து குடித்து 23(இருபத்தி மூன்று) ஆண்டுகளாக அவர் எடுத்த முயற்சியின் விளைவாகவே மூலதனம் என்ற நூலை அவரால் படைக்க முடிந்தது"! -இறையன்பு, ஐ. ஏ. எஸ்., ( 'வியர்வையின் வெகுமதி' நூல்-பக்கம் 129-30)

கருத்துகள்