கலைவாணி என்ற பெயருடன் தன் இசைப் பயணத்தைத் தொடங்கி, இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கலைவாணி என்ற பெயருடன் தன் இசைப் பயணத்தைத் தொடங்கி, தமிழ்திரையுலகிலும், இதர இந்தியமொழிகளின் திரையுலகிலும் இசை சாம்ராஜ்யத்தில், பல்லாண்டுகள் கொடி கட்டிப் பறந்த வாணி ஜெயராம் என்கிற குயில் இன்று இப்பூலகை விட்டு பறந்து சென்றது. தமிழகத்தை சேர்ந்த பாடகியர், பிரபலமானவர்களாக விளங்குவது அரிதிலும் அரிது. அத்தகையவர்களுள் முதன்மையானவர் வாணிஜெயராம். தமிழில் குறைவான பாடல்களே பாடியிருந்தாலும், அனைத்தும் அமுதகானங்கள் என்பதால், இவர் பிரபலமானார். இவர் பாடிய முதல் தமிழ்திரைப்படப்பாடல், "மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்ற, "தீர்க்கசுமங்கலி" படப்பாடல் தனித்துவமானது. எல்லோராலும் முணுமுணுக்கப்படுவது. முதற்பாடலே முத்தான பாடலாக அமைந்ததால், பல தமிழ்படப்பாடல் வாய்ப்புகள் தேடிவந்தன. அனைத்தையும் நன்றாகப் பாடி பிரபலமுமானார். ஆனாலும், இவருடைய தமிழ் திரையுலக ஆளுமை என்பது, குறுகிய காலம் கொண்டதாகவே இருந்தது. அதன்பிறகு ஏனோ தமிழ்திரையுலகம் இவருக்கு, அதிக பாடல்வாய்ப்புகளை வழங்கவே இல்லை. எனினும், தன்னைத்தேடிவந்த பாடல்களையும், நன்றாகப் பாடி தமிழர் நெஞ்சில் இடம் பிடித்தார். வசந்த் தேசாய் அறிமுகத்தில் இந்தியில் முதல் பாடலான.., போலோரே பப்ப்பி ஹரா .. என்கிற ஒரே பாடலில் நட்சத்திரமானார். ஆனால் லதா மங்கேஸ்கர் தன் செல்வாக்கு குறைந்து விடுமோ என்ற கவலையில் அவருடைய வாய்ப்புகளை குலைத்தார் என்கிற பேச்சும் அப்போது அடிப்பட்டது.மெல்லிசைப் பாடகியாய், தன் இசைப் புலமையை வெளிப்படுத்தி, பின் திரை இசையில், பாரம்பரிய இசை, மெல்லிசை, கிராமிய இசை, ஜனரஞ்சக இசை, என்று எல்லா வித சங்கீதத்திலும் முத்திரை பதித்து, கணக்கற்ற இசை ரசிகர்கள் இதயத்தில், வைரம் இழைத்த தங்க சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்தவர். அபூர்வராகங்கள், சங்கராபரணம், சுவாதி கிரணம் ஆகிய படங்களில் பாடிய சிறந்த பாடல்களுக்காக, மூன்றுதேசிய விருதுகளைப் பெற்றார். தவிர, எண்ணற்ற தனியார் அமைப்புகளின் விருதுகள், மாநில அரசுகளின் விருதுகள் ஆகியனவும் பெற்றுள்ளார். ஏராளமான மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், தான்சேன் விருது, மேலும் பல கௌரவங்கள், கலைமாமணி போன்ற பட்டங்கள் என்று இவர் பெயரை அலங்கரிக்கும் பெருமைகள் நம்மை பிரமிக்க வைக்கிறது. நம் திரைப்பட உலகம் கண்ட ஒப்பற்ற இசைக் கலைஞர்களில், தனியிடம் பிடித்த இசை வாணியான, கலைவாணி வாணி ஜெயராம் இன்று நம்மிடையே இல்லை. அவரது பாடல்கள் என்றும், நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும். இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 கலைவாணி என்ற பெயருடன் தன் இசைப் பயணத்தைத் தொடங்கி, தமிழ்திரையுலகிலும், இதர இந்தியமொழிகளின் திரையுலகிலும் இசை சாம்ராஜ்யத்தில், பல்லாண்டுகள் கொடி கட்டிப் பறந்த வாணி ஜெயராம் என்கிற குயில் இன்று இப்பூலகை விட்டு பறந்து சென்றது. தமிழகத்தை சேர்ந்த பாடகியர், பிரபலமானவர்களாக விளங்குவது அரிதிலும் அரிது. அத்தகையவர்களுள் முதன்மையானவர் வாணிஜெயராம். தமிழில் குறைவான பாடல்களே பாடியிருந்தாலும், அனைத்தும் அமுதகானங்கள் என்பதால், இவர் பிரபலமானார். இவர் பாடிய முதல் தமிழ்திரைப்படப்பாடல், "மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்ற, "தீர்க்கசுமங்கலி" படப்பாடல் தனித்துவமானது. எல்லோராலும் முணுமுணுக்கப்படுவது. முதற்பாடலே முத்தான பாடலாக அமைந்ததால், பல தமிழ்படப்பாடல் வாய்ப்புகள் தேடிவந்தன. அனைத்தையும் நன்றாகப் பாடி பிரபலமுமானார். ஆனாலும், இவருடைய தமிழ் திரையுலக ஆளுமை என்பது, குறுகிய காலம் கொண்டதாகவே இருந்தது. அதன்பிறகு ஏனோ தமிழ்திரையுலகம் இவருக்கு, அதிக பாடல்வாய்ப்புகளை வழங்கவே இல்லை. எனினும், தன்னைத்தேடிவந்த பாடல்களையும், நன்றாகப் பாடி தமிழர் நெஞ்சில் இடம் பிடித்தார். வசந்த் தேசாய் அறிமுகத்தில் இந்தியில் முதல் பாடலான.., போலோரே பப்ப்பி ஹரா .. என்கிற ஒரே பாடலில் நட்சத்திரமானார். ஆனால் லதா மங்கேஸ்கர் தன் செல்வாக்கு குறைந்து விடுமோ என்ற கவலையில் அவருடைய வாய்ப்புகளை குலைத்தார் என்கிற பேச்சும் அப்போது அடிப்பட்டது.மெல்லிசைப் பாடகியாய், தன் இசைப் புலமையை வெளிப்படுத்தி, பின் திரை இசையில், பாரம்பரிய இசை, மெல்லிசை, கிராமிய இசை, ஜனரஞ்சக இசை, என்று எல்லா வித சங்கீதத்திலும் முத்திரை பதித்து, கணக்கற்ற இசை ரசிகர்கள் இதயத்தில், வைரம் இழைத்த தங்க சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்தவர். அபூர்வராகங்கள், சங்கராபரணம், சுவாதி கிரணம் ஆகிய படங்களில் பாடிய சிறந்த பாடல்களுக்காக, மூன்றுதேசிய விருதுகளைப் பெற்றார். தவிர, எண்ணற்ற தனியார் அமைப்புகளின் விருதுகள், மாநில அரசுகளின் விருதுகள் ஆகியனவும் பெற்றுள்ளார். ஏராளமான மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், தான்சேன் விருது, மேலும் பல கௌரவங்கள், கலைமாமணி போன்ற பட்டங்கள் என்று இவர் பெயரை அலங்கரிக்கும் பெருமைகள் நம்மை பிரமிக்க வைக்கிறது. நம் திரைப்பட உலகம் கண்ட ஒப்பற்ற இசைக் கலைஞர்களில், தனியிடம் பிடித்த இசை வாணியான, கலைவாணி வாணி ஜெயராம் இன்று நம்மிடையே இல்லை. அவரது பாடல்கள் என்றும், நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும். இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கருத்துகள்