அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி

அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி உலகில் தமிழ் ஒலிக்காத நாடே இல்லை உலகம் முழுவதும் பரந்து விரிந்தது தமிழே! உலகின் முதல் மொழிக்கு சொந்தக்காரன் தமிழன் உலகில் தமிழன் இல்லாத நாடும் இல்லை இணையத்தில் கொடிகட்டி பறக்கும் தமிழ் ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழே இணையத்தில் உச்சம் அறம்வழி நல்வழி கற்பிக்கும் தமிழ் அன்பை அகிலத்திற்கு பறைசாற்றிடும் தமிழ் அகமும் புறமும் இலக்கியத்தில் பாடிய தமிழ் அகத்திணை புறத்திணை அற்புதமாக உணர்த்திடும் தமிழ் ஈடில்லா திருக்குறளை ஈந்திட்ட நம் தமிழ் எங்கும் அறிந்திட்ட திருக்குறள் தந்த தமிழ் உலக மனிதநேயத்தை உணர்த்திட்ட தமிழ் உலகிற்கு பண்பாட்டை பயிற்றுவித்திட்ட தமிழ் ஒழுக்கத்தை உயிருக்கு மேலாகச் சொல்லிய தமிழ் ஒப்பற்ற வீரத்தை உலகிற்கு ஓதிய தமிழ் போர் புரிவதிலும் அறநெறி வகுத்திட்ட தமிழ் போரில் அநீதியை என்றும் விரும்பிடாத தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணமுள்ள தமிழ் பண்டைக்காலம் தொட்டே சிறந்து வரும் தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்நாடு சமஉரிமையை மானிடற்கு கற்பித்த தமிழ் அகிலம் அறிந்திட்ட அற்புத மொழி தமிழ் அருந்தமிழே நம் அடையாளம் உணர்ந்திடுக!

கருத்துகள்