ெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி ! எது கவிதை ? என்ற கேள்வி எல்லோரும் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர் ! விடை மட்டும் இன்றும் கிடைக்கவே இல்லை வித்தியாசமாக எழுதி இருந்தால் கவிதையா ? வளமான சொற்கள் இருந்தால் கவிதையா ? வற்றாத கற்பனை இருந்தால் கவிதையா ? மரபு இலக்கணத்துடன் இருந்தால் கவிதையா ? மரபின்றி புதுமையாக இருந்தால் கவிதையா ? மூன்றுவரி ஹைக்கூவாக இருந்தால் கவிதையா ? முத்தாய்ப்பான வசனமாக இருந்தால் கவிதையா ? உள்ளத்தில் உள்ளதை எழுதினால் கவிதையா ? உணர்ந்த உணர்வை வடித்தால் கவிதையா ? அழகியலை அழகாய்த் தீட்டினால் கவிதையா ? அழகியின் அங்கம் வர்ணித்தால் கவிதையா ? ஏழ்மைக்காக வருந்தி எழுதினால் கவிதையா ? இன்னல்களை எடுத்து இயம்பினால் கவிதையா ? தன்னம்பிக்கை விதை விதைத்தால் கவிதையா ? தன்னிகரில்லா ஓசை நயம் இருந்தால் கவிதையா ? துன்பத்திற்குத் தீர்வு கூறினால் கவிதையா ? துயரத்திற்கு ஆறுதல் தந்தால் கவிதையா ? காதலிக்குக் காதலன் வடித்தால் கவிதையா ? காதலை உயர்வாய் காட்டினால் கவிதையா ? மரபுக்கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் ! புதுக்கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் ! வசனக் கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் ! விவேகமான ஹைக்கூவே கவிதை என்கின்றனர் சிலர் ! கவிதையின் வடிவம் எதுவாக இருந்தால் என்ன ? கவிதை வாசகர் சிந்தையைக் கவருவதாக இருத்தல் வேண்டும் ! எது கவிதை என்ற கேள்விகள் தொடர்ந்தாலும் ! எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுதோ அதுவே கவிதை !

கருத்துகள்