சொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
பிறந்த ஊரை பிரிந்தால் மனம் வலிக்கும்!
எந்த ஊரானாலும் நம் சொந்த ஊராகாது!
உயிர் உள்ளவரை சொந்த ஊர் நினைவிருக்கும்!
வந்த ஊரில் வசதியான வாழ்க்கை வசமானாலும்!
வறுமையில் வாடிய நாட்கள் நினைவில் வரும்!
பிறந்த ஊரில் கிடைத்திட்ட பேரின்பம் கிடைப்பதில்லை!
உடலால் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தலும்!
உள்ளம் சொந்த ஊரிலியே இருக்கும்!
சொந்த பந்தங்களை பிரிந்த வாழ்வு சோகமே!
சொந்தங்களைப் பார்க்க மனம் ஏங்கித் தவிக்கும்!
மூளையின் ஒரு மூலையில் நினைவு இருக்கும்!
மனம் சொந்த ஊரையே சுற்றிவரும்!
சொர்க்கம் என்றபோதும் சொந்த ஊருக்கு ஈடாவதில்லை!
கருத்துகள்
கருத்துரையிடுக