மதுரை வடக்கு மாசி வீதி .மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 29.1.2023 அன்று காலை 10 மணிக்கு கவியரங்கம் நடந்தது .

மதுரை வடக்கு மாசி வீதி .மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 29.1.2023 அன்று காலை 10 மணிக்கு கவியரங்கம் நடந்தது .செயலர் கவிஞர் இரா .இரவி தலைமையில் "ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும் " என்ற தலைப்பில் முனைவர்இரா . வரதராசன், கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,மகா .முருகுபாரதி குறளடியான் ,கு .பால் பேரின்பநாதன் இதயத்துல்லா ,இராமபாண்டியன் ,முனியாண்டி ,அழகையா ,ஆ .தனசிங் ,கவிதாயினிகள் ச .லிங்கம்மாள் ,நா .அனுராதா ,சாந்தி திருநாவுக்கரசு ,மு .ரித்திகா ஸ்ரீ ஆகியோர் கவிதை படித்தனர் . கவிஞர் மு .இராம பாண்டியன் எழுதிய " உலகின் முதல்மொழி தமிழே "என்ற கட்டுரை நூலும் ,கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு எழுதிய "பிறை நிலவுகள் "என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டன .வருகைதந்த அனைவருக்கும் நூல்களின் ஆசிரியர்கள் நூல்களை நன்கொடையாக வழங்கினார்கள் . படங்கள் நன்றி இனியநண்பர்கள் புகைப்படக் கலைஞர்கள் மோகன்,ரெ.கார்த்திகேயன் நன்றி.தினமலர் நாளிதழ்.29.1.2023

கருத்துகள்

கருத்துரையிடுக